நாடு முழுதும் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழக அரசு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விருதை, டில்லியில் நேற்று நடந்த துாய்மை பாரத விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்க, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பெற்றுக் கொண்டார். இதேபோல, ஒவ்வொரு ஆண்டும் மத்திய ஜல்சக்தி அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை வாயிலாக, ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் குறித்து அளவீடு செய்யப்படுகிறது.
அதன்படி, 2021- - 22ம் ஆண்டு தேசிய அளவில், ஊரக சுகாதாரத்தின் தரத்தில், தமிழகத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ஜனாதிபதியிடம் இருந்து, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் பெற்றுக் கொண்டார்.
வாசகர் கருத்து (14)
உன் வீட்டில் தண்ணீர் வேண்டும் என்றால் செலவழித்து தான் ஆகவேண்டும். எல்லாவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றால் எப்படி? வாசல்வரை தான் அரசு கொடுக்கும். ஆனால் இலவசத்தை கேலி செய்தால் எப்படி?
நீர் உற்பத்திக்கு முக்யத்வம் கொடுக்கப்படவேண்டும். வீட்டுக்கு வீடு போரிங் போட்டு நிலத்தடி நீரை காலி பண்ணிவிட்டோம் . ஆகையால் வீட்டுக்கு ஒரு கிணறும் ஒரு மழை நீர் சேகரிப்பு உபகரணமும் உண்டாக்கப்படவேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் , வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு கட்டணம் / வைப்புத்தொகை ஏதும் கிடையாது ..ஆனால் எந்த ஒரு கிராமத்திலும் ஊராட்சித் தலைவர் , கவுன்சிலர்களுக்கு கட்டிங் இன்றி இணைப்பு தரப்படுவதில்லை .....சுமார் 10,000 /- வரை கட்டாய லஞ்சமாக பெறப்படுகிறது ...எங்கு புகார் செய்தலும் புண்ணியமில்லை ......திருட்டு திராவிடார்கள் சில்லறை அடிக்கிறார்கள் ...அயோக்கிய தனம் ....
"தமிழகத்தில் 1.24 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, 69.14 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது" அப்படின்னா என்னங்கோ - எங்களுக்கு லாரியில் தான் தண்ணி தர்ராங்க - அதுவும் கூடத்துக்கு இவ்வளவு என்று கமிஷன் வேறு
ஸ்டிக்கர் ஓட்டிக்க முடியாம பண்றீங்களே..