Load Image
dinamalar telegram
Advertisement

காணாமல் போன சிறுவன் வாலிபராக மீட்பு: 4 ஆண்டு தாயின் தவிப்பு ஆனந்தமானது

Tamil News
ADVERTISEMENT
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த வாலிபரை 4 ஆண்டுக்கு பின் ஊட்டி அருகே குன்னுாரில் போலீசார் மீட்டுள்ளனர்.


திருப்புவனம் அருகே வடுகன்குளம் பாலசுப்பிரமணியன் -- தமிழ்செல்வியின் மகன் ஹரிஹரசுதன் 16. மகன் பிறந்த சில மாதங்களிலயே பாலசுப்பிரமணியன் மாயமாகிவிட்டார். இதனால் தனியார் மில்லில் வேலை பார்த்து மகனை தமிழ்செல்வி வளர்த்து வந்தார்.மதுரை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த ஹரிஹரசுதன் 2018 ம் ஆண்டு டிச., 3ல் பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.


குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் போலீசார் தேடி வந்தனர். அலைபேசியையும் விற்றுவிட்டதால், அவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. போலீஸ்காரர் ராஜேஸ்வரன் தனிப்பட்ட முறையில் போலீஸ் வாட்ஸ் ஆப் குழு மூலம் அவரை தேடும் முயற்சியில் இறங்கினார். இந்த குழு மூலமே வாலிபர் ஊட்டி அருகே குன்னுாரில் ஓட்டலில் பணிபுரிந்ததை கண்டறிந்தனர்.


தனிப்படை போலீசார் அவரை மீட்டு தாய் தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தனர். ஹரிஹரசுதன் இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக தாய் கஷ்டப்படுவதை அறிந்து தான் காணாமல் போனதாக தெரிகிறது.


வாசகர் கருத்து (7)

  • nannari - delhi,இந்தியா

    திரு ராஜேஸ்வரனை கண்டிப்பாக கௌரவிக்க வேண்டும்,.. இவரை போல அனைவரும் ஆர்வமுடன் உழைத்தால் பிறர் துயரம் போக்கலாம்.. நன்றி

  • katharika viyabari - coimbatore,இந்தியா

    அம்மாவுக்கு எத்தனை கஷ்டங்கள். கடவுளே காப்பாற்று அந்த தாயை.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    காவலர் திரு இராஜேஸ்வரனை மனதார பாராட்டுகிறோம்.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    ஓத்துக்கிட்டு திரும்பிட்டான். ஆனால் மேலூர் டிரைவர் மகன் தனுசு தனுசா முரண்டு பிடிக்கிறானே?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    தந்தையைப் போலவே தனயன். ஓடிப்போவதும் ஜெனிடிக் எஃபெக்டோ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement