Load Image
Advertisement

அமைச்சருக்கு எதிராக குமுறும் சீனியர்கள்!

   அமைச்சருக்கு எதிராக குமுறும் சீனியர்கள்!
ADVERTISEMENT
''மாறி மாறி புகார் குடுத்துக்கிடுதாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.


''என்ன விவகாரங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.



''சென்னை, ராயப்பேட்டையில, காங்கிரசின், ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க தலைமை அலுவலகம் இருக்குல்லா... இந்த ஆபீஸ், சில மாசத்துக்கு முன்ன, 'டிரஸ்ட்' தலைவர் வி.சி.முனுசாமி கட்டுப்பாட்டுல இருந்துச்சு வே...


''அப்ப, 'ரவுடிகளை கூட வச்சுக்கிட்டு, நிர்வாகத்துக்கு எதிரா முனுசாமி செயல்படுதாரு'ன்னு, ஐ.என்.டி.யு.சி., அகில இந்திய தலைவர் சஞ்சீவ ரெட்டி, போலீஸ் கமிஷனரிடம் புகார் குடுத்தாரு... முன்னாள் எம்.பி.,யான அவரு, அரசு முத்திரை பதிச்ச தன்னோட பழைய எம்.பி., லெட்டர் பேடுலயே புகாரை குடுத்திருக்காரு வே...


''முன்னாள் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் அரசு முத்திரையை பயன்படுத்தக் கூடாதுன்னு உத்தரவு இருக்கு... 'எந்த பதவியிலயும் இல்லாத சஞ்சீவ ரெட்டி, அரசு முத்திரையை பயன்படுத்தியதுக்கு நடவடிக்கை எடுங்க'ன்னு, போலீஸ் கமிஷனரிடம் முனுசாமி பதில் புகார் குடுத்திருக்காரு வே...'


'இதனால, 'இப்படி மாறி மாறி புகார் குடுத்தா எப்படி... கலந்து பேசி சமரசத்துக்கு வாங்க'ன்னு தொழிற்சங்க நிர்வாகிகள் புலம்புதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.


''விருதுநகர்ல தி.மு.க., முப்பெரும் விழாவை பேஷா நடத்திய அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவை, 'மருது சகோதரர்கள்'னு விழா மேடையிலயே முதல்வர் பாராட்டினாரோல்லியோ... இப்ப, யார் கண் பட்டுதோ தெரியலை ஓய்...'' என்றபடியே 'பில்டர்' காபியை குடித்து முடித்தார், குப்பண்ணா.


''ஏன் என்னாச்சு பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.


''ராஜபாளையம் தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆசியோட மணல் கடத்தல் ஜரூரா நடக்கறதா போன வாரம் ஒரு, 'ஆடியோ ரிலீஸ்' ஆனது... அந்த பரபரப்பு அடங்கறதுக்குள்ள, வனவேங்கை கட்சித் தலைவரை, அமைச்சர் ராமச்சந்திரன் நிற்க வச்சு பேசியதா, 'வீடியோ ரிலீஸ்'ஆகிடுத்து ஓய்...


''இந்த தலைவலி போதாதுன்னு, உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' வாங்கி தர, 5 லட்சம் ரூபாய் கைமாறியதா, விருதுநகர் தெற்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கற்பகம், வத்திராயிருப்பு ஒன்றிய செயலர் முனியாண்டிக்கு நடுவுல நடந்த பிரச்னையிலயும், 'ஆடியோ' வெளியாகிடுத்து...


இதனால, விருதுநகர் தி.மு.க.,வே கலகலத்து போயிருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''ராணிப்பேட்டை தி.மு.க.,வுலயும் பிரச்னை ஓடிட்டு இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...


''ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க., செயலரா, மாநில கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, போட்டி இல்லாம தேர்வானாருங்க... புதுமுகங்களுக்கு பதவிகளை வாரி வழங்கியவர், 'சீனியர்'களை ஓரங்கட்டுறதா சலசலப்பு கிளம்பியிருக்குங்க...


''மாவட்ட பொருளாளரா நியமிக்கப்பட்டு இருக்கிற சாரதி, ஆற்காடை சேர்ந்த பிரபல தொழிலதிபராம்... அ.தி.மு.க.,வுல இருந்த இவர், போன வருஷம் ஆகஸ்ட் மாசம் தான் தி.மு.க.,வுக்கே வந்தாருங்க...''நேத்து வந்தவருக்கு பொருளாளர் பதவியான்னு, சீனியர்கள் கடுப்பாகிட்டாங்க...அதே மாதிரி, செயற்குழு உறுப்பினர்களா, ராணிப்பேட்டையில இருந்து நாலு பேர் நியமிக்கப்பட்டு இருக்காங்க... இதுல ரெண்டு பேரு, அமைச்சரோட நாயுடு சமூகத்தை சேர்ந்தவங்க...


''மத்த ரெண்டு பேரு முதலியார் சமூகத்தை சேர்ந்தவங்க... இதுல, வன்னியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததும், கொந்தளிப்புக்கு காரணமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (2)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாரதி ஏன் பாப்பாவிடம் சொன்னான் ? பெரியவர்களிடம் சொன்னால் எடுபடாது, இனம் இனத்தோடுதான் சேருமென்று அன்றே பாரதி கணித்து விட்டான். அதன் வெளிப்பாடு தான் பாமக விசிக. .

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

    \\இதுல ரெண்டு பேரு, அமைச்சரோட நாயுடு சமூகத்தை சேர்ந்தவங்க..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement