Load Image
dinamalar telegram
Advertisement

மீண்டும் ஒரு நகரை கைப்பற்றியது உக்ரைன்; ரஷ்ய கொடிகள் ரோட்டில் வீச்சு

கிவ்: நீண்ட காலமாக உக்ரைனை வீழ்த்த முடியாமல் திணறும் ரஷ்யா அவ்வப்போது கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைனிடமே இழந்து வருகிறது.
Latest Tamil News


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன.இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும் பலியாகினர்.


இந்த சண்டையால் உக்ரைனுக்கு 80 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் வீரர்கள் மிகவும் ஆவேசமாக போரிட்டு வருகின்றனர்.
Latest Tamil News


சமீபத்தில் கார்கிவ் மாகாணத்தில் உள்ள குபியான்ஸ்க் நகரை, ரஷ்ய ராணுவத்திடமிருந்து மீட்டனர். அதே மாகாணத்தில் உள்ள லிஜியும் நகரையும் உக்ரைன் ராணுவம் மீட்டது. பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே போட்டு விட்டு, ரஷ்ய ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்.


இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள லிமான் மற்றும் டொனட்ஸ்க் நகரங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். லிமானில் உள்ள டவுன் நிர்வாக நகர கட்டடத்தின் மீது ஏறி நின்றபடி உக்ரைன் வீரர்கள் படங்களை சமூக வலை தளங்களில பதிவிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த ரஷ்ய கொடிகளை அகற்றி சாலைகளில் வீசினர்.


வாசகர் கருத்து (11)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Stalinukku nerntha kathithaan putinukkum. Moolai kuzhambi payithiyakaaran aakivittaar

  • Tamilan - NA,இந்தியா

    உக்ரைனின் ஒவ்வொரு பகுதியின் இழப்பையும் நேட்டோ உலக நாடுகள் தன பகுதியாக கருதி தங்கள் சுயகவுரவமாக கருதி லச்சக்கணக்கான கோடிகல் உக்ரைனில் போருக்காக காட்டுவதுதான் அனைத்திற்கும் காரணம் . பற்றி எரியும் தைவான் , இலங்கையில் இனியும் ஒருபைசா கூட கொட்டவில்லை .

  • Tamilan - NA,இந்தியா

    80 லச்சம் கோடி பொருளாதாரத்தை இழந்தபின்பும் ஒரு கொசுறு நாட்டால் உலக வல்லரசை வெற்றிகொள்ள முடியும் .

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    அன்று சீனாவின் பேராசையால் உலகமே இரண்டாண்டு நிலை குலைந்து தடுமாறிக் கொண்டிருக்கையில் காமெடிய ஜனாதிபதி ஸிலின்ஸ்கியால் உலக பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது

  • vasan - doha,கத்தார்

    யார் தூண்டிவிட்டது இந்தியாவில் சீனாக்காரன் வந்து எல்லா இடத்தையும் ஆட்டைய போட்ட சும்மா இருப்பியா....அந்த மாதிரிதான் அவன் அவன் நாடு பற்று

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்