ADVERTISEMENT
கடலுார்-கடலுார் மாநகராட்சியில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் கடலுார் மாநகராட்சி 3வது வார்டில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.வார்டில் திருப்பதி வெங்கடாஜலபதி லாரி சர்வீஸ் உரிமையாளர் அருணாச்சலம், மைதிலி அருணாச்சலம் மரக் கன்றுகள் நட்டு வைத்து துவக்கி வைத்தனர்.மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் பிரகாஷ் தனது சொந்த செலவில், வார்டுக்குட்பட்ட 100 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் ராமலிங்கம், தெய்வநாயகம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, பாலமுருகன், பாலசந்தர், அண்ணாதுரை, சதிஷ், ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!