Load Image
dinamalar telegram
Advertisement

கோவில்கள் மீது தாக்குதல்: பிரிட்டன் தூதரகத்தில் மனு

சென்னை--'பிரிட்டனில் ஹிந்துக்கள் மற்றும் கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கையில், ஹிந்து அடையாளங்களை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்' என்று, இரண்டு நாட்டு துணை துாதரகத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, தாம்பரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.புள்ளி விபரங்கள்பின், அவர் அளித்த பேட்டி:பிரிட்டனில் பத்து நாட்களுக்கு முன், ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தி, மதக் கலவரத்தை உண்டாக்கும் சூழல் ஏற்பட்டது. இந்தியா- - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்தபோது, வேண்டும் என்றே திட்டமிட்டு, இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.அதனால், அங்குள்ள கோவில்களுக்கும், ஹிந்துக்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, சென்னையில் உள்ள பிரிட்டன் துணை துாதரகத்தில் மனு கொடுத்து உள்ளோம்.


எங்கள் மனுவை பெற்ற துாதரக அதிகாரிகள், இப்பிரச்னை தொடர்பாக, இதுவரை, 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், மனுவை பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது எனவும் உறுதியளித்தனர்.கனடாவிலும் ஹிந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா உளவுத் துறை, மனித உரிமை அமைப்புகள் ஆகியவை, புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளன.இலங்கையின் திரிகோணமலை, நம் ராமாயணத்தோடு தொடர்புடையது. அந்நாடு, ஒரு புண்ணியமான சிவபூமி. ராவணன் வாழ்ந்த பகுதி, ராவணன் வெட்டுகள், ஏழு வெந்நீர் ஊற்றுகள், சிவன் கோவில்கள் உள்ளன.


இந்த நிலையில், சிவன் கோவில் அருகே, 400 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, ஹிந்து சமய அடையாளங்களை மாற்றி, பவுத்த அடையாளங்களாக கொண்டு வர, இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று, இலங்கை துாதரகத்தில் மனு கொடுத்துள்ளோம்.கோரிக்கைமேலும், இலங்கையில் ராமாயண சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இலங்கை அரசு வாயிலாக திரிகோணமலை கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, துாதரக அதிகாரிகள் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

Latest Tamil News
மேலும், டி.ஜி.பி., அலுவலகத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், 'பி.எப்.ஐ., இயக்கம் தடை செய்யப்பட்ட பின்னும், தமிழகம் முழுதும் அந்த அமைப்பின் கொடி கம்பங்கள் உள்ளன; அவற்றை அகற்ற வேண்டும். 'தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., இயக்கத்தை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதேபோல், நாம் தமிழர் கட்சியின் சீமானும் தொடர்ந்து ஆதரித்து பேசி வருகிறார்.'இவர், ஏற்கனவே, காஷ்மீர் பயங்கரவாதி யாசிம் மாலிக்கை, தமிழகத்திற்கு அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்தினார்; அதற்கான ஆதாரங்கள் உள்ளன.


'ராஜிவை, இந்த மண்ணில் கொன்று புதைத்தோம்' என்று வெளிப்படையாகவே பேசி வருகிறார். அதனால், நாம் தமிழர் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும். 'திருமாவளவன், கோவை குண்டு வெடிப்பு கைதி நாசர் மாதானியை சந்தித்துள்ளார். அதனால், இந்த இரண்டு இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும்' என மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (3)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    செய்தது அங்கு உள்ள இஸ்லாமியர்கள். தைரியமாக அவர்கள் மீதும் கண்டனம் தெரிவிக்க வேண்டியது தானே.

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    இவர்கள் எபபோதாவது மக்கள் பிரச்சனைக்காக போராடி இருக்கிறார்களா?

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    நிஜமாய் தூங்குவோராய் எழுப்ப முடியும், மதம் பிடித்து ஆடும் பிரிட்டனிடம் போயி மனு ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்