தமிழகம் மீது பிரதமரின் பாசம்
புதுடில்லி: அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா உட்பட 20 நாடுகள் கொண்ட அமைப்பு 'ஜி 20' என அழைக்கப்படுகிறது.
ஜி- 20 அமைப்பிற்கு பல துணைக் குழுக்கள் உண்டு. இந்த குழுக்கள் எங்கு சந்திக்க வேண்டும் என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல சுற்றுலாத் தலங்களில் இந்த துணைக் குழுக்களின் கூட்டம் நடத்த வேண்டும் என பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சொன்னாராம்.தமிழகத்தில் நீலகிரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களை பிரதமர் தேர்தெடுத்துள்ளாராம்.
இந்த மூன்று இடங்களில் ஜி 20 துணைக் குழுக்களின் கூட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழக அரசுடன் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.தமிழகத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் துணைக் குழுக்களின் கூட்டங்களை நடத்த, சுற்றுலா தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்பு, உலக நாடுகள் சந்திக்கும் பொருளாதார பிரச்னைகள் உட்பட பல விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுக்கிறது. இது நடத்தும் மாநாடு களில், இந்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பர்.வரும், 2023ம் செப்டம்பரில் இந்த ஜி- 20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி 20 நாடுகளின் தலைவர்கள், டில்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பர். இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன.
ஜி- 20 அமைப்பிற்கு பல துணைக் குழுக்கள் உண்டு. இந்த குழுக்கள் எங்கு சந்திக்க வேண்டும் என்பதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். இந்தியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் பல சுற்றுலாத் தலங்களில் இந்த துணைக் குழுக்களின் கூட்டம் நடத்த வேண்டும் என பிரதமர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் சொன்னாராம்.தமிழகத்தில் நீலகிரி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களை பிரதமர் தேர்தெடுத்துள்ளாராம்.

இந்த மூன்று இடங்களில் ஜி 20 துணைக் குழுக்களின் கூட்டங்கள் நடைபெற உள்ளன. தமிழக அரசுடன் இணைந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.தமிழகத்தைப் போலவே மற்ற மாநிலங்களிலும் துணைக் குழுக்களின் கூட்டங்களை நடத்த, சுற்றுலா தலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து (16)
வெள்ளை புரட்சி என்ற புரட்டுத்தனத்தை ஒழித்து நமது தேசிய ரக பசுக்களையும் காளைகளையும் காப்பாற்றி எல்லோருக்கும் சுத்த நாட்டு பசும்பாலும் அதன் நெய்யும் கிடைக்க செய்தால் இன்னும் ஆயிரம் வருடம் தமிழகத்திலும் இந்தியாவிலும் பிஜேபி ஆட்சி தான்.
பச்சைபுரட்சி என்ற பச்சை பொய் மாற்றி பசு ஆதார இயற்கை வேளாண்மையை பிஜேபி கொண்டு வந்தால் - இன்னும் நூறு வருடங்கள் இந்தியாவிலும் தமிழகத்திலும் பிஜேபி ஆட்சிதான் வரும்.
பாசாங்கு பாசம்.
"தமிழகம் மீது பிரதமரின் பாசம்" - அதனால் தான் எய்ம்ஸ் வேலை கடந்த பல வருடங்களாக நடக்க வில்லை?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
"தமிழகத்தின் இரண்டாம் வள்ளுவர் - நம்மாழ்வார்" வழியில் சென்று வேளாண்மை, கால்நடை மற்றும் மருத்துவ துறைகளை நம் பழைய தமிழர் முறைக்கு பிஜேபி மாற்றினால் - அதன் பிறகு பிஜேபி அரசை யாரும் அசைக்கமுடியாது. தமிழகத்திலும் அணைத்து இந்தியாவிலும்.