Load Image
dinamalar telegram
Advertisement

உள்ளரங்கு இல்லாமல் ஸ்குவாஷ் விளையாட்டு மதுரையில் 3 பள்ளிகளே விளையாடும் அவலம்

Tamil News
ADVERTISEMENT


மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு உள்ளரங்கு இல்லாததால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த விளையாட்டில் ஈடுபட முடியாத நிலை உள்ளது.மாவட்டந்தோறும் 2 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்குவாஷ், ஜூடோ, வாள் சண்டை, டேக்வாண்டோ, கேரம், சிலம்பம், குத்துச்சண்டை, பீச் வாலிபால், ஜிம்னாஸ்டிக்ஸ், டெனிகாய்ட் விளையாட்டுகளில் செப்.,28 முதல் 30 வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.


மற்ற விளையாட்டுகளுக்கான அரங்கு இருந்தாலும் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு அரங்கு இல்லை. மதுரையில் 2 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அலங்காநல்லுார் அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விளையாடுகின்றனர். ஸ்குவாஷ் பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள மற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். உள்ளரங்கே இல்லாமல் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எப்படி பயிற்சி அளிப்பது. இதற்கு பெரியளவில் இடவசதியும் தேவையில்லை. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஸ்குவாஷ் அரங்கு அமைத்தால் அரசு, அரசு உதவி பெறும் மாணவர்கள் பயன்பெறுவர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஸ்வாஷ் அரங்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement