தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, 'சுவச் சர்வேக்சன்' படி, ஒவ்வொரு ஆண்டும், நகரங்களின் தூய்மை, சுகாதாரம் மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 4,354 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடந்தது.

இதன் முடிவில், ம.பி.,யின் இந்தூர் நகரம் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.இதற்கு அடுத்து குஜராத்தின் சூரத் மற்றும் மஹாராஷ்டிராவின் நவி மும்பை நகரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு 3வது இடத்தில் ஆந்திராவின் விஜயவாடா இருந்தது.
மாநில வாரியான பட்டியலில், ம.பி., முதலிடத்தில் உள்ளது. அடுத்து சத்தீஸ்கர் மற்றும் மஹா., மாநிலங்கள் உள்ளன.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் வசிக்கும் நகரங்கள் அடிப்படையிலான தூய்மை பட்டியலில் உ.பி.,யின் ஹரித்வார் நகரம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்து வாரணாசி மற்றும் ரிஷிகேஷ் நகரங்கள் உள்ளன.
100க்கும் குறைவான உள்ளாட்சி அமைப்புகள் கொண்ட மாநிலங்களின் தூய்மை பட்டியலில் திரிபுரா முதலிடம் பிடித்தது.
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசிக்கும் நகரங்களின் பட்டியலில் மஹாராஷ்டிராவின் பஞ்சங்கினி முதலிடத்தையும், சத்தீஷ்கரின் பதன் 2வது இடத்தையும், மஹாராஷ்டிராவின் கர்ஹத் 3வது இடத்தையும் பிடித்தது.
தூய்மையான கன்டோன்மென்ட் போர்டு பட்டியலில் மஹாராஷ்டிராவின் தியோலாலி இடம் பெற்றுள்ளது.
வாசகர் கருத்து (4)
போக்குவரத்து விதிமீறல் மற்றும், பாதசாரிகளுக்கு நடைபாதையே இல்லாத மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நடைபாதைகளை மருத்துவமனைகளுக்கும், நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் பார்க்கிங், விளம்பர போர்டுகள் வைத்துக்கொள்ள அனுமதித்ததில் எக்கச்சக்க துட்டு. சாமானியனின் உயிரைப்பற்றி யாருக்கென்ன கவலை?
ஒட்டு மொத்த தமிழ்நாடும் குப்பை கூளங்கள் நிறைந்த மாநிலமாக உள்ளது. இங்குள்ளவர்கள்கமிஷன், லஞ்சம், ஊழல் போன்றவற்றில் தான் ஆர்வம் காட்டுகிறார்களேயொழிய ஒரு சுத்தமான, அழகான நகரை இவர்களால் நிர்மானிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மண், தூசுப் படலம், குப்பைகள், மின் துறை கழிவுகள், கட்டிட கழிவுகள், பழுதடைந்த சாலைகள், சாக்கடை கழிவுகள், துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்துங்கள் ...... அடேங்கப்பா! இன்னும் சொலிக் கொண்டே போகலாம்.
இந்தியாவில் சாராய குப்பைகள் அதிகம் இருக்கும் நகரங்களை பட்டியலிட்டால் கண்டிப்பாக அதில் ஏதாவது ஒரு தமிழக நகரம் முதல் இடத்தில் வரும். ஹி...ஹி...ஹி...
0 ............