நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கரிக்கையூர் இருளர் பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள், 60. இவர், 'தி கார்டன் ஆப் ஹோப்' என்ற அறக்கட்டளையின் பண்டைய பழங்குடியினரின் மூலிகை அறிவை புதுப்பிக்கும் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.நீலகிரி பழங்குடியின கிராமங்களில் மருத்துவ சேவையாற்றி வரும் காளியம்மாள், 'முல்லை' என்ற மூலிகை மருந்து உற்பத்தி குழுவின் தலைவராகவும் உள்ளார்.
ஆதாரங்கள்
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில், 'ஆயுர்வேதா பார்வை 2047' என்ற தலைப்பில், பல்துறை சுகாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலை சார்பில், தேசிய அளவிலான மாநாடு, கடந்த 25ல் நடந்தது.அதில், நீலகிரி பகுதியில் உள்ள பச்சிலை, வேர் உள்ளிட்ட மூலிகை வாயிலாக, பக்க விளைவு இல்லாத, 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு காளியம்மாள் மருந்துகள் கண்டுபிடித்துள்ளார் என்பது குறித்து, ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து, மத்திய கலாசாரத்துறை சார்பில், காளியம்மாளுக்கு, 'தன்வந்திரி' என்ற தேசிய விருது வழங்கப்பட்டது.
பாரம்பரிய மருந்துகள்
நீலகிரி மாவட்ட ஆதிவாசி சங்க செயலர் ஆல்வாஸ் கூறுகையில், ''இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த காளியம்மாள், எட்டு ஆண்டுகளாக எங்கள் சங்கத்துடன் இணைந்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தும் பாரம்பரிய மருந்துகள் கண்டுபிடித்துள்ளார். ''இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது, நீலகிரி மக்களுக்கு பெருமை,'' என்றார்.
வாசகர் கருத்து (9)
இந்த மருத்துவருக்கு அரசு ஆதரவளித்தால் ஆங்கில மருத்துவ கொள்ளை அடங்கும்
சூப்பரு ., நம்ம அறிவை வாங்கி நம்மிடமே விற்கும் NGO-க்கள் கையில சிக்கி விட கூடாதே ...
Entha noi endru kooriyirunthaal makkaluku useful ah irukum
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் .. அதன் மெய் தன்மையை அறிந்து ஊக்குவித்தல் வேண்டும்.
,வாழ்த்துக்கள், தங்களால் நாங்கள் பெருமிதம் கொண்டோம். மேலும் தங்கள் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி வணக்கம் ஐயா.