Load Image
dinamalar telegram
Advertisement

ஆம்புலன்சுக்கு வழிவிட்ட பிரதமர் : வைரலாகும் வீடியோ

Tamil News
ADVERTISEMENT
காந்திநகர்: ஆம்புலன்ஸ் வருவதை அறிந்து உடனடியாக தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு உத்தரவிட்டார் பிரதமர் மோடி.

இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, நேற்று தேசிய விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இன்று நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 3வது வந்தே பாரத் ரயிலான காந்திநகர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


முன்னதாக ஆமதாபாத்திலிருந்து கார் மூலம் காந்திநகரில் உள்ள ராஜ்பவன் நோக்கி சென்றார். உடன் பாதுகாப்பு வாகனங்கள் முன்னே செல்ல பிரதமரின் வாகனம் ஆமதாபாத், காந்திநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.


Latest Tamil News
அப்போது பின்னால் ஆம்புலன்ஸ் வேகமாக வருவதையறிந்த மோடி தனது வாகனம் செல்லும் கான்வாயை நிறுத்த உத்தரவிட்டு, ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல உதவினார். இதனை வேறு ஒரு காரில் பயணித்து வந்த பா.ஜ. பிரமுகர் ஒருவர் பிரதமர் வாகனம் ஆம்புலன்சுக்கு வழிவிடும் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தி்ல் வைரலாகி வருகிறது.


வாசகர் கருத்து (43)

  • venugopal s -

    68 ஆவது தேசிய திரைப்பட விருதுகளை இன்று புதுடெல்லியில் ஜனாதிபதி திருமதி திரௌபதி முர்மு அவர்கள்" சிறந்த நடிகர்"நடிகைகளுக்கு வழங்கினார்.

  • jagan - Chennai,இலங்கை

    செய்தது தவறு. அடுத்த முறை தீவிரவாதிகள் ஆம்புலன்ஸ் பயன் படுத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்.

    • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

      உண்மைதான்

  • Mohan - Thanjavur ,இந்தியா

    அதனால்தான் அவர் பிரதமராக இருக்கிறார்.

  • Kannan - ,

    What to do if a bomb inside ambulance.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இந்த செய்தியை படிக்கும் பொது, நாட்டிற்கு முன்மாதிரியாக பிரதமர் இருக்கிறார் enru சந்தோசமாக இருக்கிறது. அதே தருவாயில் மற்றொரு செய்தி - அதுவும் முன்மாதிரிதான் போல, ஆட்சியாளரும் கட்சியை பற்றியது. மலரில் இன்று. "திமுக பேரணியால் நகரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடக்கம்: மாணவர்கள், பொதுமக்கள் அவதி".

    • Aarkay - Pondy,இந்தியா

      பங்க் தலை, நாலாப்பு கல்வித்தகுதி, அரிவாள் சகிதம் சுற்றும் உபிக்கள் மனிதர்களாம் சூப்பர் அப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்