ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அக்டோபர் 2ல் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், ‛திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும்' எனத்தெரிவித்தனர். இதற்கிடையே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனையடுத்து, பேரணிக்கு தடை செய்த தமிழக அரசு மற்றும் தமிழக போலீசுக்கும் வி.சி.க சார்பில் நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார்.
ஆர்எஸ்எஸ்.,க்கு எதிராகவும், அவ்வமைப்பின் பேரணிக்கு எதிராகவும் உயர்நீதிமன்றம் சென்ற திருமாவளவன், ஆளும் திமுக.,வின் திட்டத்தின்படி, பேரணிக்கு அனுமதி மறுக்க காரணமாக இருந்துள்ளார். ஆனாலும் இன்று (செப்.,30) சென்னை உயர்நீதிமன்றம் வரும் நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, இப்போது ஆர்எஸ்எஸ்.,ஐ எதிர்த்து நீதிமன்றம் சென்ற திருமாவளவன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ்.,சை பாராட்டி, அவர்களது கொள்கையை பாராட்டி பேசியதை மறந்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

2018ல் மதுரையில் தேசம் காப்போம் என்னும் மாநாட்டில் திருமாவளவன் பேசியதாவது: (கூட்டத்தினரை பார்த்து) ஆர்எஸ்எஸ் இயக்கத்தினுடைய மாநில தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? மதுரை மாவட்ட தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் தேசிய தலைவர் பெயர் உங்களுக்கு தெரியுமா? அவர்கள் என்றைக்காவது தங்களது பெயரை வால்போஸ்டர், சுவரொட்டிகளில் அச்சிட்டது உண்டா? துண்டறிக்கையிலே அச்சிட்டது உண்டா? என்றைக்காவது மேடையேறி பேசியது உண்டா? தன்னுடைய தலைவர் பின்னால் நின்றால் தான் தன்னுடைய முகம் தெரியும் தொலைக்காட்சியில் என்று என்றைக்காவது முண்டியடித்துக்கொண்டு மேடையிலே ஏறியது உண்டா? நான் மட்டும் ஏன் பின்னால் உட்கார வேண்டும், நானும் முன்னால் தான் உட்காருவேன் என்று முன்வரிசையிலே யாராவது வந்து முண்டியடித்துக்கொண்டு உட்கார்ந்து பார்த்தது உண்டா?

ஆனால் டெடிகேடடாக, அர்ப்பணிப்போடு பணியாற்றுகிறார்கள். இன்னொன்றையும் சொல்லுகிறேன். அவர்கள், இந்தியா முழுதும் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலே இன்றைய புள்ளிவிவரப்படி. அந்த 13 ஆயிரம் பேரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள், முழுநேர பணியாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எம்.எல்.ஏ., ஆசை கிடையாது, எம்.பி., ஆசை கிடையாது, மந்திரி ஆசை கிடையாது, அவர்களுக்கு விளம்பர ஆசை கிடையாது, ஆனாலும் தன் வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள். அந்த தியாகத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எதற்காக? அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது, ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. அவர்கள் உள்வாங்கிக்கொண்ட கொள்கையின் மீது மிகப்பெரிய பிடிப்பு இருக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் வெறி இருக்கிறது. இவ்வாறு திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆர்எஸ்எஸ்.,சை எதிர்த்தாலும், முன்பு அதே ஆர்எஸ்எஸ்.,சை திருமாவளவன் புகழ்ந்து பேசியுள்ள இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கு பலரும் அது வேற திருமா, இது வேற திருமா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (91)
ஆர் எஸ் எஸ் ஊர்வலம் புதுச்சேரியில் அமைதியாக நடந்து முடிந்தது???ஏன்????அது கிறித்துவ முஸ்லீம் டாஸ்மாக்கினாடு இல்லை என்று உறுதியானது
இவன் எல்லாம் ஒரு பொருட்டா மதிச்சு செய்தி போடறது அதுக்கு விமர்சனம் செய்யறதை விடுங்கய்யா வயித்த கழுவ என்னமோ செய்து பொழைக்கிறான்
திருமாவிற்கு இவ்ளோ பயமா ...
அது... வாங்குவதற்கு முன், இது... வாங்கிய பின். இன்னமும் விஷயம் தெரியாதவராக இருக்கிறார்களே.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாம்பாருக்கு நெத்தியிலே பெரிய பட்டை, கறிகஞ்சிக்கு குல்லா, பிரியாணிக்கு சிலுவை, இதுதான் சார் இந்தாளோட வாழக்கை