ADVERTISEMENT
சென்னை: தரமில்லாத பொங்கல் பரிசுப் பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடைசெய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் புட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.
பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது.

இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம். தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப்படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (39)
தரமற்றவர்கள் தரமற்றவைகளை தான் அடுத்தவர்களுக்கு வழங்குவார்கள்.
ஊழல் வேரூன்றிய கழகம் VidiyalKazhagam
திருமூர்த்தி, பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் தவறான நீர் மேலாண்மை செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றது. குறிப்பாக பாபநாச அணையில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு துட்டு வாங்கி கொண்டு நீர் திறந்துவிடப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகளை பற்றி அதிகாரிகள் எந்த கவலையும் படுவதில்லை.
ரெண்டு கோடி வேலை தர்ரோம்னு சொல்லி ஏமாத்துனவங்களுக்கே திரும்ப வாக்களிக்க வில்லையா? இந்த முறையாவது குடுப்பாங்கன்னுதான்... நம்பிக்கையே வாழ்க்கை அண்ணாமலை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கொள்ளையடிக்க வந்தவர்களிடம் கோரிக்கை வைக்கமுடியுமா-அண்ணாமலை அவர்களே.