Load Image
dinamalar telegram
Advertisement

பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமித்து கடை வைக்கலாம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுக்கவே மாட்டாங்க 

Tamil News
ADVERTISEMENT
மதுரை--மதுரை பைபாஸ் ரோட்டில் நீங்கள் விரும்பிய இடங்களை தேடுங்கள்... அங்கு ஆக்கிரமித்து கடை வைக்கலாம் என விளம்பரம் செய்யாத குறை தான்... அந்த அளவு கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தொடர் கதையாக வருகிறது.


பைபாஸ் ரோடு காளவாசல் டூ பழங்காநத்தம் வரை நெடுஞ்சாலை ஓரங்களில் ரயில் பெட்டிகள் போல்குட்டி, குட்டி உணவு பெட்டி கடைகள் வைத்துள்ளனர். ரோட்டோரம் காஸ் சிலிண்டர், அடுப்பு, டைனிங் டேபிள், வாஷ் பேஷன் உள்ளிட்ட சகல வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். சாய்ந்து ஓய்வெடுக்க ஒய்யாரமாக கட்டில் கூட அடுத்து போட்டு விடுவார்கள்.இந்த கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் ரோட்டிலேயே கார்கள், டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நெஞ்சை நொறுக்குகிறது.இதனால் தினமும் பைபாஸ் ரோட்டில் 'கபடி' விளையாடும் கார்கள், பாயும் பஸ்கள், ஆட்டம் காட்டும் ஷேர் ஆட்டோக்களை காணலாம். இதற்குஇடையில் நடந்து ரோட்டை கடப்பவர்களுக்கு ஆஸ்கார் விருதை கொடுத்தாக வேண்டும். நெடுஞ்சாலைக்கு தான் இந்த கதி என்றால் சர்வீஸ் ரோடுகள்இருபுறமும் படு மோசமாக கிடக்கிறது. அங்கும் தள்ளு வண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அவசரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என அமைக்கப்படும் சர்வீஸ் ரோடுகளை கூட கடைக்காரர்கள் விடுவதில்லை.நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி அதிகாரிகள் நினைத்தால் ஒரே நாளில் இதற்கு முடிவு கட்டிவிடலாம். ஆனால் அவர்கள் யார் எப்படி போனால் என்ன என பொறுப்பின்றி காலத்தை கழிக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பின் 'டார்க்கெட்' வெள்ளிக்கிழமை மார்க்கெட்

மதுரை பைபாஸ் சர்வீஸ் ரோடுகளை ஆக்கிரமிப்பதில் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டிற்கு அதிக டார்க்கெட் உண்டு. அந்த ஒரு நாள் மட்டும் சர்வீஸ் ரோட்டில் நடக்க ஒத்தையடி பாதை அளவு கூட இடம் இருக்காது. குடியிருப்புகள், நிரந்தர கடைகள் அதிகம் உள்ள சர்வீஸ் ரோட்டில் யாருக்காவது உடல் நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாது. பல ஆண்டுகளாக இப்படி தான் இந்த ரோடு ஆக்கிரமிப்புகளால் நிரம்பியுள்ளது. ஆனால் மாநகராட்சியோ தொடர்ந்து சர்வீஸ் ரோட்டில் மார்க்கெட் நடத்த ஏலம் விடுகிறது. எல்லாம் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல் உள்ள அதிகாரிகள் தங்கள் வீட்டு பகுதிகளைஆக்கிரமித்தால் ஏற்றுக்கொள்வார்களா என பைபாஸ் ரோடு மக்கள் கொந்தளிக்கின்றனர்.நீங்களா போனால் லாபம்; நாங்களா எடுத்தால் நஷ்டம்

நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கடைகளை எடுத்து கொண்டு நீங்கள் போனால் லாபம், நாங்களாக எடுத்தால் நஷ்டம் தான் பைபாஸ் ரோடு ஆக்கிரமிப்பு கடைக்காரர்களிடம் பல முறை எச்சரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நாங்கள் வரும் போது கடைகளை எடுக்கும் அவர்கள் எங்கள் தலைகள் மறைந்த பின் மீண்டும் கடை விரிக்கின்றனர். பல உணவு கடைகளில் சுகாதாரம் இல்லை. தரமற்ற உணவுகளை சமைக்கிறார்கள். உணவு கழிவுகளை ரோட்டில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வருகிறார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எங்கள் பொறுப்பு. அதே போல் தரமற்ற உணவுகள் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.வாசகர் கருத்து (11)

 • Rajayogan Palanichamy - Virudhunagar,இந்தியா

  எங்குமில்லாமல் Highway Department டே தனது ஆபிஸையும் இன்ஜினியர் வீடு மற்றும் store சில காலம் தற்காலிகமாக முதலில் கட்டி தற்சமயம் நிறந்தரமாக கட்டி (மதுரை) கச்சேரி ரோட்டி கட்டி பல ஆண்டு காலங்களாக உபயோகிக்கும் அவர்கள் மற்றவர்களை எப்படி கேட்க முடியும். இந்த ரோடு National Highway ஆக இருந்தவரை ஆக்கரமிப்பு இல்லாமல் இருந்தது State Highway ஆன பின் அவர்களே நிறந்தர கட்டிய பின் மற்றவர்களும் நிறந்தரமாக கட்டியுள்ளனர். இது எனது கணிப்பு இதற்கு SHD தற்காலிக அனுமதி பெற்று பின் அதை நிரந்தரமாக ரோட்டு ஓரத்தில் கட்டியதால் மற்றவர்களும் அவர்களும் நேசனல் Highway ruleபடி இருந்த சுற்று சுவரையே முன்னால் நகற்றி கடைகளும் கட்டியதாலேயே விருதுநகருக்குள் வண்டிகள் வரமுடியாமல் சிரமாக உள்ளது. இதற்கு National மற்றும் State Highway கலந்து ஆலோசனை செய்து நிரந்தர கட்டிடங்க அகற்றினால் தான் accident வாய்ப்பு குறையும். இதில் எனது கணிப்பு தவறாக இருந்தால் இதற்கு விளக்கம் அளிக்க வும்

 • Makkaliloruvan - Madurai,இந்தியா

  Corporation officers very sincere in getting bribe. Their family should suffer first due to encroachment then only they will feel the pain of common man...

 • P.manikandan - Madurai,இந்தியா

  பைபாஸ் ரோடு பாலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள காலியிடங்களில் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டிற்கு பயன்படுத்தலாம்

 • sasikumaren - Chennai ,இந்தியா

  கையூட்டு அதிகாரிகள் காவல்துறையினரால் தீர்வு எப்படி கிடைக்கும்

 • ThiaguK - Madurai,இந்தியா

  அதிகாரிகளை அடிமைகளாகி விட்டனர் பணத்தாலும் உணவாலும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement