Load Image
dinamalar telegram
Advertisement

லொள் ...லொள்...லொள்: எங்கும் உலா வரும் தெரு நாய்கள்; ரேபிஸ் நோயால் நடுங்கும் மக்கள்

Tamil News
ADVERTISEMENTதிண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் நாய்கள் அதிகரிக்க மனிதர்களை கண்டதும் கடிப்பதால் தெருக்கள், ரோட்டோரங்களில் வலம் வரும் இவைகளை பார்க்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.


மாவட்டத்தில் கிராமங்கள்,நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் நாய்கள் அளவுக்கு அதிகமாக இனப்பெருக்கம் செய்து ரோடுகளில்சுற்றுகின்றன. ரோட்டில் செல்லும் டூவீலர்கள்,கார்களில் செல்கையில் துரத்துகின்றன.சில நேரங்களில் டூவீலர்களில் செல்வோரை கடிக்கிறது. ரோட்டோரம் சுற்றித்திரியும் நாய்கள் குறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தால் எதையும் கண்டுகொள்வதில்லை. தெருக்களில் சுற்றும் நாய்களால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வீட்டில் துாங்குபவர்களுக்கு இடையூறாக தெருக்களில்சத்தமிடுகின்றன. மக்களை அச்சுறுத்தும் அளவிற்கு அவ்வப்போது தெருவோரங்களில் நாய்கள் சண்டையிடுகின்றன. அப்போது டூவீலரில் வரும் அப்பாவிகளை கடிக்கின்றன. வெறி பிடித்த நாய்கள் மற்ற நாய்களை கடிக்க அவைகளும் வெறிபிடித்து ரோட்டில் செல்லும் அப்பாவி மக்களை கடிக்கிறது.இது போன்ற நாய்கடியால் தினமும் 15க்கு மேற்பட்டோர் மருத்துவமனையை நாடுகின்றனர். கிராமங்களில் கால்நடைகள்,கோழிகள்,புறாக்களையும் கடிக்கின்றன.நாய்களை குடும்பக்கட்டுபாடு மூலம் கட்டுப்படுத்த உள்ளாட்சிகள் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்க்கிறது.


கேட்டால் போதிய நிதி இல்லை என காரணம் கூறுகின்றன . இது போன்ற அலட்சிய போக்கை தவிர்த்து நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..................... தெருநாய்களுக்கு தடுப்பூசி தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து காப்பகங்களில் சேர்க்கவேண்டும்.குடும்பகட்டுப்பாடுகளை முறையாக செய்து இனபெருக்கம் அதிகரிப்பை தடுக்கலாம். ரேபிஸ் தடுப்பு ஊசிகளை தெருநாய்களுக்கும் செலுத்தினால் நாய்கடியால் பாதிப்போர் ரேபிஸ் நோயிலிருந்து தடுக்க உதவிகரமாக இருக்கும் .இதையும் உள்ளாட்சிகளில் செயல்படுத்த வேண்டும். சதீஷ்குமார்,வழக்கறிஞர்,திண்டுக்கல்.

கடித்தால் காலம் தாழ்த்தாதீங்க

நாய் கடித்தால் முதலில் கடிப்பட்ட இடத்தை கழுவி சுத்தப்படுத்தவேண்டும். இதோடு காலம் தாழ்த்தாமல் மருத்துவமனையை விரைந்து அணுகவேண்டும்.நாட்களின் அடிப்படையில் 3 அல்லது 5 தடுப்பூசிகள் செலுத்தப்படும். முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு 'இமினோகுளோபிளின்' தடுப்பூசி போடப்படும். ரேபிஸ் வருவதற்கு முன் மக்கள் மருத்துவரை அணுகவேண்டும்.இல்லையென்றால் காப்பாற்றுவது கடினம்.வீரமணி,அரசு மருத்துவமனை டீன்,திண்டுக்கல்வாசகர் கருத்து (7)

 • மெர்சி - திருச்சி ,இந்தியா

  திருச்சி உய்ய கொண்டான் திருமலை ரெங்கா நகரில் இதே நாய் தொல்லை சிறு பிள்ளைகள் உள்ளனர் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தால் நல்லது

 • Mohan - Salem,இந்தியா

  ஹூம் மனிதர்களின் வாழ்வு சாவு பற்றி கவலைப்படாத அரசு இயந்திரம் நாய்களின் வாழ்வு பற்றி அக்கறையுடன் இருப்பது போல் தோன்றுகிறது. அவற்றினால் வரும் பிரச்னை களுக்கு என்ன தீர்வு?..தெரியவில்லை. தினமும் மனிதனின் வயிற்றுக்காக துடித்தபடி உயரிழக்கும் லட்சக்கணக்கான மீன் வகைகள், கழுத்தறுபட்டு உயிரிழக்கும் ஆடு மாடு காடைகள்,ஒட்டகங்கள், வெந்நீரில் உயிரிழக்கும் கோழிகள்,குஞ்சுகள்...இவைகள் சாகடிக்கப்படும் நிலைகளை எண்ணிப்பார்க்கவேண்டும். மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் பறவைக்காய்ச்சல் வந்தால் கோழிகள் லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றன. இவையெல்லாம் நவறில்லை என்றால், வீணாக தெருக்களில் சுற்றித்திரிந்து மக்களை கடிக்கும் நாய்களை 30 ஆண்டுகள் முன்பு செய்தது போல பிடித்து பரலோகம் அனுப்ப ஏன் தயக்கம்? SPCA போன்றவர்கள் வாயை சட்டத்தால் அடைக்க வேண்டும். தெரு நாய்களைவிட மனிதர்கள் & குழந்தைகளின் உயிர் முக்கியம்

 • எவர்கிங் -

  திருச்சி அந்த நல்லூர் ஒன்றியம், அல்லூர் சேவை அருகே 28 வீடுகள், 2 வீதி, 2 சந்துகள் கொண்ட ஜனதா நகரில் சாலையில் நடக்கக் கூட முடியாத அளவுக்கு சொறிநாய்கள் தொல்லை.....,ஆனால் பேட்டா செருப்பு அமைப்பின் போராட்டம் எதிர்ப்பு காரணமாக அரசே நாய்கள் கட்டுப்பாட்டை நிறுத்தி வைத்திருப்பதாக பஞ்சாயத்து உறுப்பினர்கள் மழுப்புகிறார்கள்

 • Sivarajan - Chennai ,இந்தியா

  சென்னை மாதவரம், கேகேஆர் கார்டன் பகுதிகளிலும் நாய் தொல்லை அதிகம்

 • sasikumaren - Chennai ,இந்தியா

  முன்பு ஊருக்கு ஊர் நாய் பிடிக்கும் வாகனங்கள் வரும் அதை இப்போது காண முடியவில்லை ஏதாவது வெளிநாட்டுக்கு விற்று விட்டார்களா என்ன அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சொகுசு காரில் சர்சர் என்று பறக்கிறார்கள் மக்கள் கஷ்டம் எங்கிருந்து புரிய போகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement