Load Image
dinamalar telegram
Advertisement

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க முடிவு

Tamil News
ADVERTISEMENT
மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு 'இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற இசட் பாதுகாப்பு இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
Latest Tamil News
இந்நிலையில்முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.பி. எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு சமீபத்தில் அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை அதிகரிக்க ' இசட் பிளஸ் ' பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து 'இசட் பிளஸ் ' பாதுகாப்பு படைப்பிரிவில் 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் உள்ளிட்ட 55 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள்.


வாசகர் கருத்து (9)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் பெருகிக்கொண்டே போகிறது பெட்டிக்கடை முதல் கோடீஸ்வரர் வரை எத்தினை கட்சிகளுக்குதான் நிதி கொடுக்க முடியும். பெரிய தலைகள் குறிப்பாக தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர்களே தனி கட்சி ஆரம்பித்து விட்டார்கள் சிலர் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு சொத்தை பாதுகாத்துக்கொண்டு வரும் நிலை, ஆகவே அரசுக்கும், ஆள்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், நாட்டு வளர்ச்சிக்கும் முதுகெலும்பே சுய வேலைவாய்ப்பு மட்டுமே , இவர்களுக்குத்தான் பாதுகாப்பு மிக மிக முக்கியம், அரசியல் கட்சிக்கு அவர்களே பாதுகாப்பு அதற்க்கு மேல் வேறு என்ன வேண்டும், வந்தே மாதரம்

  • Elamathivanan Era -

    நாட்டுக்காக என்னகிழிச்சார் தனக்குவேண்டும்அளவுக்கு சொத்துக்கள் சேர்த்தார் அதுக்குஅவருக்கு பாதுகாப்பு அவசியம்

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

    என்ன பாதுகாப்பு வேணாம் கொடுக்கலாம். மாசா மாசம் அவர் அந்த பாதுகாப்புக்கு பணம் கட்டினாl சரி.

  • Sampath - Chennai,இந்தியா

    Mr Priyan Vedanad, when you become like Mr Mukesh, you will understand how much you are contributing to the economy. Till such time, you one can not understand this.

  • Suri - Chennai,இந்தியா

    அடானிக்கு எப்போ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்