ADVERTISEMENT
சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
வரும் அக்.,2ம் தேதி தமிழகம் முழுவதும் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடக்கவிருக்கும் நிலையில் தமிழகத்தில் அனுமதி மறுப்பதற்கு காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ்., பேரணியால் சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படும் என போலீசார் அளித்த விளக்கம் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? அண்டை மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (40)
ஐயா சட்டம் புத்தகத்தில் இருக்கு ஆனா இந்த ஆட்சியில் ஒழுக்கம் எங்கய்யா இருக்கு
சட்டம் ஒழுங்கை காக்கத்தெரியாதவர்கள் ஏன் ஆட்சி செய்ய விரும்புகிறார்கள்?... இது நீதிமன்ற அவமதிப்பில்லையா?...
மத்திய அரசின் சட்டம் ஒழுக்க மீறலை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? ஆம்....
RSS பேரணி நடந்தால்,நாங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்கின்றனர் திமுகவும்,தோழமை கட்சிகளும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஐயா ஆப்பீசரா இருந்தப்போ சட்டம் ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு அடக்குனாப்புல. இப்போ, மேலும் அதுபற்றி உயர் கல்வி படிக்க அமெரிக்கா போயிருக்காரு.