ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம் மன்னிப்பு கோரிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை எனக்கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் அக்.,17 ல் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், கட்சியின் மேலிடத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கட்சித் தலைவர் பதவியோடு, ராஜஸ்தான் முதல்வர் பதவியையும் வகிக்க திட்டமிட்டு, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை துாண்டி விட்டு அவர் நடத்திய நாடகம், சோனியாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அவர் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக ம.பி.,யை சேர்ந்த மற்றொரு மூத்த தலைவர் திக்விஜய் சிங் அறிவித்தார்.
இச்சூழ்நிலையில், அசோக் கெலாட் டில்லி சென்று சோனியாவை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, ராஜஸ்தானில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சோனியாவுடன் ஆலோசனை நடத்தினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது. அன்று நடந்தது அனைத்தும், நான் முதல்வராக தொடர வேண்டும் என அனைவரும் விரும்புவதையே காட்டுகிறது. நடந்தது அனைத்திற்கும் சோனியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளேன். இச்சூழ்நிலையில், தார்மீக பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை.
நான் முதல்வராக தொடர்வேனா இல்லையா என்பதை சோனியா முடிவு செய்வார். கொச்சியில், ராகுலை சந்தித்த போது, தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், அவர் மறுத்த போது, நான் போட்டியிட முடிவு செய்தேன். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், தலைவர் பதவிக்கான போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளேன். இவ்வாறு கெலாட் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (15)
செத்துப்போன கட்சிக்கு எதற்கு தலைவர்
கட்சி தலைவர் பதவியில் சம்பாதிக்க முடியாது அதனால்தான் தலைவர் பதவி கொடுத்தாலும் முதல்வர் பதவியை விடமருக்கிறார்.
1).புத்திசாலித்தனமான முடிவு.2). இந்த இத்தாலி கசாப்பு கடைகாரர்களை நம்பி எதிலும் இறங்க கூடாது.3). குறிப்பாக ராகுல்காந்தி என்ற மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்ககூடாது. நன்றி வணக்கம் ஐயா
இதெல்லாம் ஒரு கட்சி, அதற்கு தேர்தல் ஒரு கேடு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
சச்சின் பைலட்.... தாரளமாக பிஜெபி யில் சேர்ந்து... நாட்டுக்காக உழைக்க வேண்டும்.... அவர் தவறான இடத்தில்(கான் கிராஸ் கட்சி) இருக்கும் நல்ல மனிதர்