Load Image
dinamalar telegram
Advertisement

மழைக்காலத்திற்கு ஏற்ற மணக்கும் மிளகு குழம்பு!

Tamil News
ADVERTISEMENT
பருவக்காலம் வந்தால் சளி, காய்ச்சல், உடல் உபாதைகள் 'டான்னு' ஆஜராகிவிடும். இந்த கிளைமெட்டை ரசிக்கவிடாமல் வரும் இந்த பிரச்னைகளை போக்க ஒரு சிறந்த 'ஸ்பைஸ்' மிளகு. பகைவன் வீட்டுக்கே ஜாலி டூர் போட வைக்கும் ஒரு மந்திரப் பொருள் இந்த மிளகு.

இதற்கு இரைப்பை குடல் வலி, குடல் வாயு மற்றும் பிற வயிற்று தொடர்பான ஜீரண பிரச்சனைகளை சீர் செய்யும். மேலும் மிளகிற்கு அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்சிடென்ட், கிருமி எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது. அதனால் சளி, காய்ச்சலை விரட்டும் தன்மை உள்ளது. அதேபோல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். சமையிலில் முட்டை, சான்ட்விச், கறி, சூப், சாலட், போன்றவற்றில் மிளகை தூக்கலாக சேர்த்து அதன் சுவையைக் கூட்டலாம். மிளகை முழுதாகவும், பொடி செய்து தூளாகவும் பயன்படுத்தலாம்.

இப்படி பல பலன்களை தந்து, சமையலுக்கும் பல வழிகளில் பயன்படுகிறது. இந்தியாவில் மிளகாய் ('சில்லி') வரும் வரை மிளகு தான் காரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மிளகினை வைத்து செய்யக்கூடிய பாரமரியம் மற்றும் சுவையான செட்டிநாடு குழம்பினை எவ்வாறு சமைப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:



Latest Tamil News
வறுத்து அரைக்க:
மல்லி விதை - 3 டீஸ்பூன்
மிளகு, கடலைப் பருப்பு - தலா 2 டீஸ்பூன்
உளுந்து, சுக்குப் பொடி - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

தாளிக்க :
கடுகு - ஒரு டீஸ்பூன்
சீரகம், உளுந்து - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:



Latest Tamil News முதலில் புளியைத் தண்ணீரில் நன்கு ஊறவைக்கவும். குழம்பிற்கு தேவையான மசாலா பொருட்களை தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளுங்கள். அடுப்பை அணைத்துவிட்டு, அதிலேயே கறிவேப்பிலையைப் போட்டு வறுக்கவும். சட்டின் சூட்டிலேயே அதுவும் நன்கு வறுபட்டுவிடும். இவை ஆறியதும் தேவையான அளவு தண்ணீரை சிறிதுசிறிதாக விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் போன்ற தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டுத் தாளிக்கவும். அதில் அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்குங்கள். புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள்.

கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை அணைத்துவிடலாம். மணக்கும் மிளகு குழம்பு தயார். வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் டக்குனு செய்து அனைவரையும் அசத்தலாம். பூண்டு சேர்த்து குழம்பு செய்தால் சுவை இன்னும் கூடும்.

இந்த குழம்பை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு சேர்ந்து, மொறு மொறு அப்பளத்துடன் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைக்கு இதமாக இருக்கும். மருத்துவப்பலன் நிறைந்த இந்த குழம்பை நெய் விட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உணவைச் செரிக்க வைத்து, சளியினால் வரும் அலர்ஜியை போக்கும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement