Load Image
dinamalar telegram
Advertisement

இந்த அக்டோபரில் கேரளாவில் சுற்றிப் பார்க்க ஏற்ற 3 இடங்கள்!

Tamil News
ADVERTISEMENT
பருவமழை முடிந்து கேரளா எழில்கோலம் பூண்டுள்ளது. மிதமான வெயில், ஈரச்சாலைகள், கண்களுக்கு குளிர்ச்சியான பசுமைக் காட்சிகள் என கடவுளின் தேசம் மரகதமாக மின்னும் காலம் இந்த அக்டோபர் காலம். குளிர்காலம் தொடங்கும் அக்டோபர் மாதத்தில் கேரளாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய சில சிறந்த இடங்களின் விவரங்கள் உங்களுக்காக...

குமரகம்



Latest Tamil News

அக்டோபர் மாதத்தில் சுற்றிப் பார்க்க ரம்மியான இடம் கேரளாவின் குமரகம். பேக்வாட்டர் எனப்படும் உப்பங்கழியில் உள்ள வேம்பநாடு ஏரியில் குமரகம் அமைந்துள்ளது. இந்த ஊரின் கால்வாய்கள் இணைக்கின்றன. அதனை பாரம்பரிய படகு இல்லம் மூலம் சுற்றி வரலாம்.


Latest Tamil News
படகு செல்கையில் சலசலக்கும் நீர் சத்தமும், சுற்றிலும் கேட்கும் பறவைகளின் இசை சத்தமும், கால்வாய் ஓரம் நீருடன் தொட்டுப் பேச முயலும் பசுமையான மரக்கிளைகளும் நாம் நந்தவனத்தில் சென்று கொண்டிருப்பது போன்ற உணர்வை தரும்.
Latest Tamil News அங்குள்ள வேம்பநாடு ஏரி அரியவகை புலம்பெயர் பறவைகளின் புகலிடமாக உள்ளது. சைபீரியன் நாரைகள் உட்பட பல பறவை இனங்களை காணலாம். சதுப்பு நிலங்கள், தென்னந்தோப்புகள், காபி தோட்டங்கள் மற்றும் நெல் வயல்களை உள்ளடக்கிய குமரகம் பயணம் செய்ய இனிமையான இடங்களில் ஒன்று.



அக்டோபர் மாதத்தில் இங்கு சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ். குமரகமில் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்களாக வேம்பநாடு ஏரியைக் கூறலாம். மாலை சூரிய மறைவு சமயத்தில் இந்த ஏரியில் படகில் செல்வது அலாதியானதாக இருக்கும். பாதிராமணல் தீவு, மரச்சிற்ப அருங்காட்சியகம், புனித ஜான் பேப்டிஸ்ட் சர்ச் ஆகியவை நேரம் செலவிட ஏற்ற இடங்கள்.


Latest Tamil News
பாதிராமணல் தீவு என்பது உப்பங்கழியின் நடுவில் பச்சைப் பட்டு விரித்தது போல் அமைந்துள்ளஒரு சிறிய திட்டு. படகு மூலம் தான் இங்கு செல்ல முடியும். பகல் நேரங்களில் மட்டும் செல்ல ஏற்ற இடம். ஆள் அரவமின்றி அமானுஷ்யமாக இருக்கும்.


குமரகம் அடைவது எப்படி: இதன் அருகே கொச்சி ஏர்போர்ட் உள்ளது. கோட்டயம் ரயில் நிலையம் உள்ளது. ரயில் நிலையத்திலிருந்து குமரகம் 16 கிலோமீட்டர் மட்டுமே. சென்னை, கோவை, மதுரை என பல ஊர்களிலிருந்து ரயிலில் செல்லலாம். மாநில அரசு இயக்கும் பேருந்துகளும் மூணாறு, கொச்சி, பெங்களூரு, கோவை நகரங்களிலிருந்து செல்கின்றன.


இங்கு ரூ.1,500லிருந்து ஓட்டல் அறைகள் கிடைக்கின்றன. சொகுசு ரிசார்ட்கள் ரூ.20 ஆயிரம் விலையில் கூட உள்ளன.

கொல்லம்



Latest Tamil News கேரளாவின் தென் மேற்கில் லட்சத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள அழகிய துறைமுக நகரம் தான் கொல்லம். மின்னும் கடற்கரை மற்றும் பரபரப்பான அஷ்டமுடி ஏரி ஆகியவற்றை உள்ளடக்கிய கொல்லம் ரோமானியர்கள் காலத்திலிருந்தே வர்த்தக மையமாகவும் பிரபலமானதாகவும் இருந்தது. இங்கு பரவூர் ஏரி, கொல்லம் கடற்கரை, தேவல்லி அரண்மனை, திருமுல்லாவரம் கடற்கரை ஆகியவை சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்கள்.

Latest Tamil News
கொல்லம் அட்வென்ச்சர் பூங்காவில் படகு சவாரி செய்தபடி நகரை தள்ளி நின்று பார்ப்பது புது அனுபவமாக இருக்கும். ஆழப்புழா வரை கூட படகிலேயே செல்லலாம். கேரள சுற்றுலாத் துறை படகுகளில் மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அங்குள்ள அஷ்டமுடி ஏரியிலும் படகு இல்லத்தில் வலம் வரலாம். தங்கசேரி கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் கண்டுகளிக்க சிறந்ததொரு இடம்.


Latest Tamil News
கொல்லமிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் ஜடாயு இயற்கை பூங்கா உள்ளது. இங்கு தான் பிரம்மாண்ட ஜடாயு பறவையின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிப் பார்த்துவிட்டு இன்ஸ்டா ரீல்ஸ் செய்து லைக்ஸ் அள்ளலாம்.


எப்படி அடைவது: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து தினசரி கொல்லமிற்கு ரயில்கள் உள்ளன. இரவு ஏறினால் காலை கொல்லம் அடையலாம். அதே போல் நாகர்கோவில், நெல்லை, கோவை, மதுரை, சேலம் என முக்கிய நகரங்களிலிருந்து கொல்லமிற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் உண்டு. ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம். தங்கும் விடுதிகள் இங்கு ஆயிரம் ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

மூணாறு



Latest Tamil News குமரகம் மற்றும் கொல்லம் கடல் பிரியர்களுக்கான ஊர் என்றால், மூணாறு மலை பிரியர்களுக்கான ஊர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது மூணாறு. பிரிட்டிஷ் காலத்தில் உயரதிகாரிகளின் ரிசார்ட்டாக இது விளங்கியது. 19ம் நூற்றாண்டில் இந்த மலையை மாற்றி தேயிலை தோட்டங்களாக்கினர். தற்போது மலையை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

Latest Tamil News
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சிறப்பினங்களில் ஒன்றான நீலகிரி வரையாடின் வாழ்விடமாக எரவிக்குளம் தேசியப் பூங்கா உள்ளது. அதன் அருகே லக்கம் நீர்வீழ்ச்சி, ஆனைமுடி சிகரத்தில் உள்ள வீயூ பாயின்ட், இயற்கை எழில் சூழ்ந்த மட்டுபெட்டி அணை ஆகியவை கண்டுகளிக்க ஏற்ற இடங்கள்.


Latest Tamil News
அக்டோபர் மாதம் இங்கு 22 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும். பட்ஜெட் விடுதிகள், சொகுசு ரிசார்ட்கள் என தங்குவதற்கு பல இடங்கள் உள்ளன. எர்ணாகுளம் இதன் அருகே உள்ள ரயில் நிலையம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement