Load Image
dinamalar telegram
Advertisement

ஏட்டிக்கு போட்டியா?: ஆர்எஸ்எஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு

Tamil News
ADVERTISEMENT

சென்னை : வரும் அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதே நாளில் மனித சங்கிலி நடத்தப்போவதாக அறிவித்தது.


ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணி, விசிக மனித சங்கிலி உட்பட அனைத்து அமைப்புகளின் பேரணிகள், நிகழ்வுகளுக்கும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சார்பில் தமிழக போலீசிடம் அனுமதி கோரப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு, அம்பேத்கர் நூற்றாண்டு, விஜயதசமி ஆகியவற்றையொட்டி இந்த பேரணி நடத்துவதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு, இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனிநீதிபதி முன்பாக வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்க போலீசுக்கு உத்தரவிட்டது.

Latest Tamil News
இந்நிலையில், திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்ததால் உள்துறை செயலர், டி.ஜி.பி., திருவள்ளூர் எஸ்.பி மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற அவமதிப்பு ‛நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.


இதற்கிடையே ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழகம் முழுவதும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும் என்பதால் அனுமதி மறுப்பதாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விசிக மனித சங்கிலிக்கும் மறுப்பு



ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதாக அறிவித்த அதே அக்டோபர் 2ம் தேதி, அதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தற்போது சட்டம் ஒழுங்கை காரணம் வைத்து போலீசார் அனுமதி மறுத்த நிலையில், வி.சி.க.,வின் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அக்.,2ம் தேதி சில அமைப்புகள் சார்பில் நடத்தப்பட இருந்த அனைத்து பேரணிகள், நிகழ்ச்சிகளுக்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழக அரசு விளக்கம்



Latest Tamil News
அனுமதி மறுப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்துள்ள விளக்கம்: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய நாளில், சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகளும் மனித சங்கிலிக்கு அனுமதி கோரியுள்ளன. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் அண்மைகாலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


மத்திய அரசால் பாப்புலர் பிரன்ட் ஆப் (பி.எப்.ஐ) அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்துகின்றனர். எனவே ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களும் அனுமதி அளிக்க இயலாது. இவ்வாறு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முறையீடு



Latest Tamil News
பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு முறையீடு செய்துள்ளது. அதில், ‛சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யும் வகையில் அரசு உத்தரவிட்டுள்ளதாக' முறையிட்டுள்ளது.


இந்த மனு எண்ணிடப்பட்டால் நாளை (செப்.,30) விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழலை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றத்தில் தமிழக போலீஸ் தரப்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து (158)

  • பேசும் தமிழன் -

    கோர்ட் அனுமதி அளித்த விசயத்தில்.. அரசு நடைமுறைப் படுத்தவில்லையனில் அந்த அரசு மீது .... 356 பிரிவை பயன்படுத்தலாம்

  • பேசும் தமிழன் -

    சட்டம் ஒழுங்கை பராமரிக்க முடியவில்லை என்றால்.... பதவியை ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே???

  • Kudandhaiyaar - kumbakonam,இந்தியா

    ஆர் எஸ் எஸ் கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று திமிறியெழ சொல்லி, அப்படியே ரெண்டையும் நிறுத்தி விட்டார்கள் அதுதான் தி மு க வின் தந்திரம். காரணம் சொல்லப்பட்ட, சட்டம் ஒழுங்கை, உள்துறை மற்றும் நீதி மன்றத்திற்கு அணுகி அரசை கலைக்க முடியுமா? சட்டம் தான் பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் மத்திய ராணுவத்தை கொண்டு வந்து நிறுத்தலாமே.

  • montelukast sodium - jeddha,சவுதி அரேபியா

    அருமை... முதல்வர் நல்லா வச்சி செய்வார் சங்கிகளை...

  • montelukast sodium - jeddha,சவுதி அரேபியா

    எவனோ ஒரு சங்கி கெத்தா நடத்துவோம் என்று சொன்னான் ...டேய் போச்சா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement