Load Image
dinamalar telegram
Advertisement

இந்திய மாணவர்களுக்கு உடனே விசா கொடுங்க!: அமெரிக்காவிடம் கேட்கிறார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர்நியூயார்க்: இந்திய மாணவர்களுக்கான விசா வழங்குவதில் அமெரிக்காவில் தாமதம் ஏற்படுவதாகவும் , இது தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அரசிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கர் வலியுறுத்தி உள்ளார்.
Latest Tamil News

அமெரிக்கா சென்ற அவர் மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
Latest Tamil News
என்னுடைய அமெரிக்க பயணம் மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தியா -அமெரிக்க உறவு உலகம் தழுவிய மாற்றத்தை ஏற்படுத்தும். இரு நாட்டு உறவு மிக முக்கியமானதாகும். அமெரிக்க விசா நடைமுறை சிக்கலை தீர்க்க வேண்டும், பல இந்திய மாணவர்கள் அமெரிக்க விசா கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.


இது குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க வேண்டும். இந்தோ பசிபிக் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தை பாதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (35)

 • Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ

  லீகலாக விசா எடுத்து, பணம் கொடுத்து கல்லூரிகளில் படிக்கவரும் இந்தியர்களுக்கு விசா ஒருவருட கால தாமதம் சீனாவிலிருந்து கல்லூரிகளுக்கு படிக்க வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இங்குள்ள தொழில்நுட்பங்களை திருடிக்கொண்டு போபவர்களுக்கு ஒரு வாரத்தில் விசா பிடன் வந்த பிறகு, அமெரிக்காவின் தெற்கு எல்லையிலிருந்து லட்சகனக்கான illegal மக்கள் அமெரிக்கர்களின் உழைப்பை உறுஞ்சி வாழ வருபர்களுக்கு விசா இல்லாமல் சிவப்புக்கம்பள வரவேற்பு - அவர்களுக்கு இலவச இடம் மாத பண உதவிகள் இதுதான் ஜனநாயக கட்சியின் பிடன் நிர்வாகத்தின் கேவலமான நிலை இது ஜனநாயக கட்சியின் ஒரு ஒட்டு வங்கி முதலீடு நினைத்த நேரத்தில் டாலரை அடித்து கொள்ளலாம் என்ற திமிர் - இதை இந்திய போன்ற நாடுகள் டாலரை புறக்கணித்து அமெரிக்காவிற்கு பாடம் புகட்ட வேண்டும்

 • நல்லவன் - chennai,இந்தியா

  இந்தியாவில் தரமான நிறைய பள்ளிகளை காட்டாமல் அண்டைநாட்டிடம் பிச்சையெடுப்பதில் என்ன பெருமை. ... அரசியல் வியாபாரம் மாணவர்களிடம் வேண்டாம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  தராட்டி என்ன பண்ணுவே ?? டுவிட்டர் ஆபிசில ரைடு பண்ணுவியா.. பண்ணிக்கோ.

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அண்ணாமலைக்கா கேக்குறீங்க? அமேரிக்கா போயி மேல் படிப்பு படிக்க போறேன்னு சொன்னாரு. தேசபக்தருக்கு வெளிநாட்டு படிப்பு எதுக்கு.

 • Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ

  அமெரிக்காவின் உலக பெரும் நிறுவனங்களை பொறுப்புள்ள, உண்மையுள்ள, கடும் உழைப்பாளிகளானா இந்தியர்களின் மூளை தேவை, அமெரிக்காவின் இன்றைய அரசாங்கத்தையும், பல முக்கிய நாசா போன்ற அமைப்புகளின் மூளையாக செயல் படுபவர்கள் பெரும்பாலான இந்தியர்கள்தான் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தவர்கள். இவர்களுக்கு விசா வழங்க கொஞ்சநஞ்ச தாமதம் இல்லை ஒரு வருடத்திற்கு மேலான தாமதம் EAM very clearly said "who you are fooling"? America is cheating herself American Indian's votes are not Bidan and Democratic party next time He and his team will be defeated for sure American Indian's should use their power and influence but they are not good for that This is why they are in higher places in America Every body was complaining about Trump immigration policy - this guy worst than him and particularly for India. Trump was a blubber but he was friends of Indian and India. He is the one who stopped Arms and finance to Pakistan and tighten the screw for China Hope he will come back Jai Hind God Bless America for good deeds

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்