Load Image
dinamalar telegram
Advertisement

அடங்க மறு; அத்துமீறு, திமிறி எழு; திருப்பி அடி என, தொண்டர்களுக்கு போதிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

Tamil News
ADVERTISEMENT

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:ஆர்.எஸ்.எஸ்., என்பது ஒரு கட்டுக்கோப்பான, ஒழுக்கமான அமைப்பு. நீதி, நேர்மை, நியாயம், கலாசாரம், பண்பாடு குறித்து போதிக்கும் தேசபக்தி இயக்கம். அதனால், ஆர்.எஸ்.எஸ்., எதை செய்தாலும், திருமாவளவனும், கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்ப்பதில் ஒன்றும் வியப்பில்லை.


'அடங்க மறு; அத்துமீறு, திமிறி எழு; திருப்பி அடி' என, தொண்டர்களுக்கு போதிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:'விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நெல்லின் ஈரப்பதம், 16 சதவீதம் இருக்க வேண்டும்' என, விவசாயிகளை நிர்ப்பந்திப்பது கண்டனத்துக்கு உரியது. தற்போது பெய்யும் மழையால், நெல்லின் ஈரப்பதம், 20 - 25 சதவீதம் வரை உள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில், 21 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, முதல்வர் தலையிட்டு, ஈரப்பத அளவை குறைந்தபட்சம், 21 சதவீதம் வரை உயர்த்த வேண்டும்.


இப்படி எல்லாம், 'செக்' வச்சா தானே, தனியார் நெல் வியாபாரிகளை தேடி விவசாயிகள் ஓடுவாங்க!

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும், தி.க.,வும், தி.மு.க.,வும் தான் நச்சு சக்திகள். நல்லாட்சி கொடுக்க முடியவில்லை. விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியாத உங்களின் அரசு தான் வெற்று அகப்பை. பா.ஜ., வளர்கிறது என்ற உண்மையை, வயிற்றெரிச்சல் அறிக்கை வழியே வெளிப்படுத்தியமைக்கு நன்றி முதல்வரே.


எது எப்படியோ... உங்க வாயில இருந்தே, முதல்வருக்கு நன்றி சொல்ல வச்சுட்டாங்க பாருங்க!

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:பல அரசியல் கட்சிகள் பெட்ரோல் குண்டு வீச்சை கண்டித்த போது, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.சி., திருமாவளவன் ஆகியோர் விசாரணையை திசை திருப்ப, ஹிந்து முன்னணி, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்களே, தங்கள் வீட்டில் வெடிகுண்டு வீசியதாக இழிவாக பேசினர்.

Latest Tamil News

அவங்க அப்படி எல்லாம் பேசாமல் இருந்தால் தான், நீங்க சந்தேகப்படணும்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:பாலாற்றில், 250 கோடி ரூபாயில் இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆந்திர மாநிலம், குப்பத்தில், அம்மாநில முதல்வர் ஜெகன் பேசியுள்ளது, தமிழக மக்களை மிகவும் கவலை அடையச் செய்துள்ளது. 'இது ஒரு பொதுக்கூட்ட செய்தி. பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை' என்பது போல, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் எந்த விஷயத்தை தான், சீரியசா எடுத்து பேசியிருக்கார்...


ஒரு காலத்துல, 'பாலாற்றுல தண்ணீரே வராது... அதுல அணை கட்டுனா என்னா, கட்டாட்டி என்ன'ன்னு பேசியவர் தானே அவர்!வாசகர் கருத்து (17)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  அதுக்கு பேரு அறச்சீற்றம் நாராயணா.

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  அடங்க மறு, சரி ஒன்னய யார் அடங்க சொன்னாய்ங்க. அத்து மீறு, ஆனா செருப்படி விழுமே. திமிறி எழு, நீ எழு எக்கேடு கெட்டுப்போ எனக்கென்ன. திருப்பி அடி, அடிச்சவன திருப்பி அடிச்சிக்கோ, சும்மா இருக்குறவன அடிச்சா மூஞ்ச பேத்துருவோம்ல. தலைவனாம் அறிவுரை சொல்றத பாரு. ஒழுங்கா படி, உழைத்து முன்னேறு, நாலு பேருக்கு நல்லது செய்ன்னு சொன்னா நல்ல குடிமகனா, சமூகத்தில் கெளரவமான மனிதனா வளர்வான். அத்துமீறுன்னா தருதலையா, தெருப்பொறுக்கியாதான் வளர்வான்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அடக்குபவர்களிடம் அடங்கமறுப்பது வேண்டுமானால் சரியாக இருக்கலாம் ஆனால் அத்துமீறுவது எப்படி சரியாகும் .

 • Viswanathan - Thanjavur,இந்தியா

  ,,,,....

 • Viswanathan - Thanjavur,இந்தியா

  ,,,,...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement