Load Image
Advertisement

சுற்றுலா பயணியர் வருகை: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

 சுற்றுலா பயணியர் வருகை: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்
ADVERTISEMENT
புதுடில்லி: இந்த ஆண்டு, தமிழகம் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் முதலிடத்தையும், வெளிநாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 'இந்திய சுற்றுலா புள்ளி விபரம் - 2022' என்ற 280 பக்க அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வெளியிட்டார்.


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணியர் எண்ணிக்கையில் 15 கோடி பேரை ஈர்த்து, தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடம் பிடித்த உத்தர பிரதேசத்துக்கு ஒன்பது கோடி சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.

Latest Tamil News
இதேபோல், வெளிநாட்டு சுற்றுலா பயணியரை அதிகளவில் ஈர்த்ததில் 12.6 லட்சம் பேருடன் மஹாராஷ்டிரா முதலிடமும், 12.3 லட்சம் பேருடன் தமிழகம் இரண்டாம் இடமும் வகிக்கின்றன. உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, 2021 - 2022ல் உள்நாட்டு சுற்றுலா பயணியர் 30 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணியர் 38 ஆயிரம் பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.


அதேநேரத்தில், தமிழகத்தின் மாமல்லபுரத்தை, வெளிநாட்டு பயணியர் அதிகம் பேர் ரசித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 1.4 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். உள்நாட்டு பயணியரின் விருப்பத்தில் புதுடில்லியில் உள்ள செங்கோட்டை, குதுப்மினார் ஆகியவையும் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவில் 3,693 பாரம்பரிய இடங்கள், தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்படுகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (10)

 • Bhakt - Chennai,இந்தியா

  தமிழகத்தின் பிரம்மாண்ட கோவில்களும் ஆன்மீக மண்ணுமே காரணம்.

 • ஆரூர் ரங் -

  ஆன்மீக சுற்றுலாவுக்கு நாட்டிலேயே தமிழகம் சிறந்த அமைப்பைப் பெற்றுள்ளது .( வடமாநிலங்கள போலல்லாமல் முகலாயர் தாக்குதல் பாதிப்பு இங்கு குறைவு)..ஆனாலும் என்ன? இங்குள்ள 99 சதவீத புனித நகரங்களில் சுகாதாரக்கேடு. யாத்திரை வருபவர்களுக்கு போதுமான சுத்தமான கழிப்பறை கிடையாது. எங்கெங்கும் குப்பைகளும் சாக்கடை அடைப்பும். ஆட்டோ முதல் கடைக்காரர்கள் வரை அவர்களை அளவுக்கு மீறி 🥵சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். பெண் பயணிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் . பல ஆண்டுகளாக மத்திய சுற்றுலா துறை அறிவுறுத்தியும் மாநில அரசு கண்டுகொள்வதில்லை. இவற்றையெல்லாம் மீறி இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கோடான கோடி நன்றி.

 • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

  மறைந்திருந்த மாணிக்கங்கள், புதைந்திருந்த புண்ணியபூமியினை, கேட்பாரற்று கிடந்த கோகினூர் வைரங்கள் - என்று தமிழகத்தின் அணைத்து முக்கியத்துவத்தையும், சீனா - பாரதம் என்ற உலகின் முக்கிய சக்திகள் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி உலகமே உன்னிப்பாக கவனித்த மாமல்லபுரத்தினை தமிழகத்தை பாரிர்க்கு வெளிச்சம்போட்டு காட்டிய பாரத பிரதமரே இந்த சுற்றுலாப்பயணிகள் சாதனைப்படைக்கும் அளவிற்கு வரக்காரணம் என்பதை மறக்கக்கூடாது. சுற்றுலா பயணிகள் மெரீனாவிற்கு வரமாட்டார்கள் என்பதை அறியவும்.

 • Mohan - Thanjavur ,இந்தியா

  இருக்காதா பின்ன. 10 வருச காய்ச்சலுக்கு பொறவு ஒன்றரை வருஷமா நல்ல அறுவடை. வாங்குன கடனையும் தள்ளுபடி செஞ்சாச்சி. (எங்களுக்கு ஓட்டளித்தவர்கள், ஓட்டு போட போகாதவர்கள் உபயம்) கார்ல ஒரு பெட்டி பணம், ஒரு பெட்டி சரக்கு எடுத்துக்கிட்டு எங்க போவோம் அங்கனத்தான்.

 • சீனி - Bangalore,இந்தியா

  விடியல் குடும்பம் துபாய்ல விளம்பரதாரர் நிகழ்ச்சி நடத்துறாங்க... மோடிஜி கால் வெச்சதால தமிழக மண், தங்க மண்ணாக மாறி வருமானம் கொட்டுகிறது... இதையெல்லாம் பாராட்டவில்லைன்னாலும், வசை பாடாமா இருந்தாலே போதும். அதே போல், சுற்றுலா பயணிகளை குறிவைத்து அதிகவிலை வைத்து மொட்டையடிக்க நினைக்காமல், சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து, அவர்களை சுதந்திரமாக பார்க்க அனுமதிச்சாலே போதும், விரும்பி வருவாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்