ADVERTISEMENT
சென்னை : திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்ட விண்ணப்பத்தை நிராகரித்ததால் உள்துறைச் செயலர் டி.ஜி.பி. திருவள்ளூர் எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்ற அவமதிப்பு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் காக்களூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் அனுமதி கேட்ட விண்ணப்பத்தை இன்ஸ்பெக்டர் நிராகரித்துள்ளார். இதையடுத்து கார்த்திகேயன் சார்பில் உள்துறைச் செயலர் பனீந்தர ரெட்டி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திருவள்ளூர் எஸ்.பி. பகேர்லா இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீலதா ஆகியோருக்கு வழக்கறிஞர் பிரபு மனோகர் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி அவர்கள் தரப்பை கேட்ட பின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதனால் 'நீதிமன்ற உத்தரவு தெரியாது' என நீங்கள் யாரும் கூற முடியாது. உத்தரவு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
மேலும் நேரிலும் உத்தரவின் நகல் வழங்கப்பட்டது.உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மீறும் வகையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்ட விண்ணப்பத்தை நிராகரித்து திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டுள்ளார்.உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி அனுமதி மறுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை. போதிய பாதுகாப்பு வழங்குவது தான் உங்கள் கடமை.இன்ஸ்பெக்டர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது;
நீதிமன்ற அவமதிப்பாகும். உள்துறைச் செயலர் டி.ஜி.பி. திருவள்ளூர் எஸ்.பி. ஆகியோருக்கு நீதிமன்ற உத்தரவு அமல்படுத்த வேண்டியதை உறுதி செய்யும் கடமை உள்ளது.எனவே உடனடியாக திருவள்ளூர் இன்ஸ்பெக்டர் பிறப்பித்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நேரிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (11)
நீதிமன்றம் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே மத்தியில் உச்சமன்ற நீதி அரசர் கூறியபடி நீங்கள் தான் புத்திசாலி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியது காதில் விழுந்ததா? நீதிமன்ற ஆணையை அமல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் போலீசின் கடமையாகும். பிறகு கதை மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளித்தினவன் போலாகிவிடும்
Ungalal thamizhagathil ondrum mudiyaathu.
சட்டம் ஒழுங்கை காப்ப்பாற்ற வக்கில்லாத விடியாஅரசு
மாவட்ட செயலாளர் அனுமதி மறுக்க உத்தரவிட்டிருப்பார். மாவட்ட எஸ் பி க்களுக்கு மாவட்ட செயலாளர்களின் உத்தரவை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
The wealth of state is very important. RSS is very dangerous party. The peaceful of state is absolutely required at this time. Hence, the decision of state govt. is appreciated. Court order is not genuine at all times