ADVERTISEMENT
கொடைக்கானல்,-கொடைக்கானலின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணை ரூ. 10 கோடியில் புதுப்பிக்கப்படும் நிலையில் இதன் பணி முழுமையடையும் தருவாயில் உள்ளதுநகரின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணையில் கூடுதல் தண்ணீர் தேக்கவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏதுவாக அணையை பலப்படுத்த இப்பகுதியினர் கோரினர். இதையடுத்து 2021ல் மாநில மூலதன மானிய நிதி ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டு அணையின் உயரத்தை அதிகப்படுத்துதல், துார்வாருதல், கரையை பலப்படுத்தல் பணிகள் துவங்கியது. தற்போது முழுமை பெறும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே உள்ள 21 அடி அணை 12 அடி கூடுதலாக உயர்த்தி 33 அடியாக உள்ளது. தற்போது பெய்த மழைக்கு கூடுதல் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடைகாலத்தில் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இதன் பணிகள் முழுமை பெறும் தருவாயில் உள்ளது. கரையை சுற்றி புல்வெளி அமைத்தல் ,பலப்படுத்தும் பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இத்திட்டத்தால் இனி கொடைக்கானலுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது ,என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!