Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து காங்., - எம்.பி., பகிரங்க கருத்து

Tamil News
ADVERTISEMENT
திருமங்கலம்: 'காங்கிரஸ் முதுபெரும் தலைவர் காமராஜருக்கு சமாதி கட்டியது நாங்கள் தான்' என பேசிய தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கருத்து பதிவு செய்துள்ளார்.


முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டை மீறி, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல்வேறு சர்ச்சை கருத்துகளை பேசி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, மனு தர்மத்தில் உள்ளதாக கூறி, ஈ.வெ.ரா., எழுதியுள்ளதாக கூறி ஒரு கருத்தை, ஹிந்து மக்களுக்கு எதிராக தெரிவித்தார். இதைக் கண்டித்து, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இந்தப் பிரச்னை முடிவதற்குள், தி.மு.க.,வின் அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி காமராஜரை பற்றி ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.அதில் அவர், 'நம்மை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என அனைவருக்கும் தெரியும். காமராஜர், 'தி.மு.க., காரனின் கட்டைவிரலை வெட்டுவேன்' என்றார். ஆனால் அவருக்கு கல்லறை கட்டியது நாம் தான்' என, பேசியுள்ளார்.
Latest Tamil News

இதைக் கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சியான காங்கிரசின் விருதுநகர் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூர், 'காமராஜரை இழிவுபடுத்திய, அநாகரிகமான பொய்யான பேச்சு பேசிய ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (47)

 • T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா

  ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து காங்., - எம்.பி., பகிரங்க கருத்து ஹா ஹா ஹா நாளையே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இது காங்கிரசின் விருதுநகர் தொகுதி எம்.பி., மாணிக்கம் தாகூர் அவர்களின் சொந்த கருத்து .இதற்கும் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் சம்பந்தம் இல்லை இல்லை இல்லை என அறிக்கைகள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை .விருதுநகர் எம்பி சோற்றில் அதிகமாக உப்பு சாப்பிட்டுவிட்டார் .அதனால் தான் உளறி விட்டார் என டெல்லி ராகுல் காங்கிரஸ் சொன்னாலும் ஆச்சரியம் இல்லை இல்லை

 • sankaseshan - mumbai,இந்தியா

  காங்கிரஸ் திமுக இரண்டுமே வெட்கம் கேட்டகூமுட்டைகள் இன்னிக்கு அடிச்சுப்பான் நாளை தோளில் போட்டுப்பான்

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  முன்பே இவர் தலித் மக்களுக்கு நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியுள்ளார். அதை யாருமே பொருட்படுத்தவில்லை. குருமாகூட பதிலே பேசவில்லை. ஆமோதித்துள்ளார் போல இருக்கிறது. இப்போது. கருமை வீரர் காமாராஜருக்கு சமாதி கட்டியது அவர்களே என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். இன்னும் பல பல இவரிடமிருந்து போகப்போக வரும். இவருடைய பேச்சை யாருமே கண்டுகொள்வது கிடையாது. இதுதான் காரணம்.

 • madhavan rajan - trichy,இந்தியா

  தமிழ்நாட்டை பொறுத்தவரை காங்கிரஸ் என்பது திமுகவின் B டீம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. காங்கிரஸுக்கே அவர்கள் கல்லறை கட்டிவிட்டார்கள். காமராஜுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்கள் இந்திரா காந்தியும் அவர் குடும்பத்துக்கு அடிவருடும் நிலையில் உள்ள இன்றைய காங்கிரஸ்காரர்கள்தான்.

 • Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ

  முடிஞ்சா கூட்டணியை விட்டு விலகுவோம்னு சொல்லேன் பாப்போம் தைரியம் இருந்தா... உனக்கும் அவரை விட்டால் வேறு ஆள் இல்ல, அவருக்கும் உன்ன விட்டால் வேறு ஆள் இல்ல...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்