Load Image
dinamalar telegram
Advertisement

தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும்: உ.பி., கவர்னர் பேச்சு

Tamil News
ADVERTISEMENT
கோவை : ''அரசியல் விமர்சனங்களை கடந்து தேசிய கல்விக்கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும்,'' என, உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல் கூறினார்.


கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் தேசிய அளவிலான கருத்தரங்கில் பங்கேற்ற உ.பி., மாநில கவர்னர் ஆனந்திபென் படேல் மாணவியருக்கு விருது வழங்கி பேசியதாவது:கவர்னர் பணியில் இருந்த இந்த மூன்றாண்டுகளில் உ.பி.,யில் 75 மாவட்டங்களை ஆய்வு செய்துள்ளேன். பெண்களுக்கான பிரச்னைகள், சிறையில் இருக்கும் பெண்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.

Latest Tamil News
உ.பி.,யில் 85 ஆயிரம் காச நோயாளிகளை பராமரித்து வருகிறோம். 2050ல் காசநோய் இல்லாத நாடாக இந்தியா மாறும். அரசியல் விமர்சனங்களை கடந்து தேசிய கல்விக் கொள்கையை விரைவாக செயல்படுத்த வேண்டும். புதிய இலக்குகளை அடைய வேண்டும். தேசிய கல்விக்கொள்கையின் தன்மை, இந்திய கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் வாயிலாக அறிவோடு மாணவர்களின் தேவைக்கேற்ப திறன்களும் வளர்க்கப்படும்.


அது திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்கி, தேசத்தின் மீதான மரியாதையை எழுப்பும். ஒவ்வொரு பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும், சிறந்த அறிவு சென்றடைய வேண்டும் என்பதே, இக்கொள்கையின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.


அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர் தியாகராஜன், துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், பதிவாளர் கவுசல்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (9)

  • venugopal s -

    நான் கூட நம்ம ஆளுநர் மட்டும் தான் என்று நினைத்தேன்,பாஜக ஆட்சியில் எல்லா மாநில ஆளுநர்களும் ஒரு மாதிரியாகவே இருக்கின்றனர்.

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    அது கோச்சிங் சென்டர் கல்விக் கொள்கை. தேசிய கல்விக் கொள்கை அல்ல. பள்ளிப்படிப்பின் மார்க்குகளூக்கு மரியாதை கொடுக்காத எந்த ஒரு கல்வியும் ஏமாற்றே

  • Yogeshananda - Erode,இந்தியா

    உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • அப்புசாமி -

    உள்ளூர் கெவுனர் போறாதுன்னு உ.பி கெவுனரையும் களமிறக்குறாங்க. பா.ஜ நல்ல முன்னேற்றம். அதுசரி, புறநானூறு, அகநானூறுன்னு ஒண்ணும் சொல்லவே இல்லையே.

  • இவன் -

    அப்டி கஷ்ட பட்டு படிக்கலாம் டுமிலன்ஸ்கு தகுதி இல்ல, quota ல கொடுங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்