Load Image
Advertisement

உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா

 உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன் துவங்கிய சீனா
ADVERTISEMENT
பீஜிங் :தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை அடையாளம் காண்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


உலகின் அதிகாரமிக்க நாடாக மாறுவதற்கான முயற்சியில், நம் அண்டை நாடான சீனா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக, தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரைக் கண்டு பிடிப்பதற்காக, உலகெங்கும் சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களைஅந்த நாடு துவக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
Latest Tamil News

.கனடா, அயர்லாந்து உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இந்த சட்டவிரோத போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. சீனாவின் போலீஸ் துறையான, பி.எஸ்.பி., எனப்படும் பொது பாதுகாப்பு வாரியத்தின் கீழ், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகின்றன. இதுவரை, 21 நாடுகளில், 30 போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கிஉள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஏற்கனவே மனித உரிமை மீறல் அதிகமாக உள்ளது.



இந்நிலையில், மற்ற நாடுகளில் தன் நாட்டுக்கு எதிராக செயல்படுவோரை கண்டுபிடிக்க இந்த போலீஸ் ஸ்டேஷன்களை சீனா துவக்கியுள்ளது. இதனால், மனித உரிமை மீறல் செயல்கள் அதிகரிக்கும் என, மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.தொழில் பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில், இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (8)

  • நல்லவன் - chennai,இந்தியா

    "சட்டவிரோதமாக போலீஸ் ஸ்டேஷன்" அப்போ போலீஸ்ன்னா சட்டப்படித்தான் செய்வார்களோ... குழப்பமா இருக்கே..

  • Raa - Chennai,இந்தியா

    கலாச்சாரம் என்ற போர்வையில் மிக அருமையாக தமிழ் பேசும் சீனா பெண்கள் தமிழகத்தில் அதிகம். தமிழ் ஆணை மணக்கும் சீனா பெண்ணும், தமிழ் பெண்ணை மணக்கும் சீனா ஆணும் - இவை எல்லாம் NIA மிகவும் கண்காணிக்க வேண்டியவை.

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    சூப்பர் .இதற்க்கு ஐ நா சபை அங்கீகாரம் கொடுக்கலாம் .எல்லா நாடுகளும் இது போல் ஆரம்பிக்கலாம் .

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    போங்க பாஸ் நீங்க லேட், இந்தியால சீன போலீஸ் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பெயரில் ரொம்ப காலமா இயங்குது, போலீஸ் chief ராவுலு சார் அப்பப்போ எஜமானை சந்திச்சி அப்டேட் குடுப்பாரு

  • Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா

    அதெப்படி அந்த நாடுகளின் அனுமதியின்றி இப்படியெல்லாம் திறக்க முடியும்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement