Load Image
dinamalar telegram
Advertisement

போலீசுக்கு அடி, உதை போதையில் ரவுடி தாக்குதல் 

கொடுங்கையூர் :சென்னை, கொடுங்கையூர், கட்டபொம்மன் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரவுடி செந்தில்குமார், 34. இவர் மீது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.கொடுங்கையூர் காவல் நிலையத்தில், சட்டம் - ஒழுங்கு பிரிவில் போலீஸ்காரராக இருப்பவர் லட்சுமணன், 31. இவர், அமர்வு நீதிமன்ற பணி நிமித்தமாக நேற்று கொடுங்கையூர், ஆர்.வி.நகர், அய்யப்பன் கோவில் தெருவில் வசிக்கும் வரலட்சுமி என்பவருக்கு, வழக்கு தொடர்பான சம்மன் கொடுக்க சென்றார்.அங்கு போதையில் இருந்த செந்தில் குமார், லட்சுமணனிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை கீழே தள்ளி, எட்டி உதைத்து தாக்குதலில் ஈடுபட்டார். பைக்கின் சாவியை பிடுங்கி வைத்துக்கொண்டார்.இதில் காயமடைந்த போலீஸ்காரர் லட்சுமணன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் புகாரின் படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான ரவுடி செந்தில்குமாரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement