Load Image
dinamalar telegram
Advertisement

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுஹான் அறிவிப்பு

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி :முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹான், 61, நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

ராணுவம், கப்பல், விமானம் உள்ளிட்ட முப்படைகளுக்கும் தலைமை வகிக்கும் உயரிய பொறுப்பான முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி 2020ல் உருவாக்கப்பட்டது. முதல் தலைமை தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் பொறுப்பேற்றார்.


Latest Tamil News
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் அருகே கடந்த நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட, 13 பேர் உயிரிழந்தனர். அவர் உயிரிழந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய தலைமை தளபதி நியமிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுஹானை நியமிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.

கடந்த 1961, மே 18ல் பிறந்த அனில் சவுஹான், நம் ராணுவத்தின் குர்கா ரைபில்ஸ் படைப்பிரிவில் 1981ல் பணியில் சேர்ந்தார். ஜம்மு - காஷ்மீரின் மிக கடுமையான பாராமுல்லா பகுதியில் வடக்கு படைப்பிரிவில் காலாட்படையின் மேஜர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.

வடகிழக்கு படைப்பிரிவில் லெப்டினன்ட் ஜெனரலாகவும், கிழக்கு படைப்பிரிவில் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் - இன் - சீப் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர், 2021, மே மாதம் பணி ஓய்வு பெற்றார். சிறப்பான ராணுவ பணிக்காக பரம் வசிஷ்ட் சேவா, உத்தம் யுத் சேவா உட்பட பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.


வாசகர் கருத்து (6)

  • பெரிய குத்தூசி - Chennai,இந்தியா

    லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான், பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய (சிடிஎஸ்) முப்படை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார், இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் (டிஎம்ஏ) செயலாளராகச் செயல்படுகிறார். லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் கிட்டத்தட்ட 40 வருடங்களாக ராணுவப் பணியில் உள்ளார். பல முக்கியமான இரகசிய ராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்று 16000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளை வேட்டையாடி உள்ளார். இந்த வரிசையில் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், திடீர் சமூக போராளிகள் போன்று தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு வெளிநாட்டு சக்திகளுக்கு வேலை செய்யும் துரோகிகளையும் இவரது குழு வேட்டையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சமயத்தில் விடுதலை சிறுத்தைகள், நாம் டுமிழர் கட்சிகளுக்கும் (கூலிக்கு மாரடிக்கும் திடீர் திராவிட போராளிகள்) கும் வாழ்த்துகள் கூற கடமை பட்டுளோம்.

  • sankaseshan - mumbai,இந்தியா

    நர்வானே என்ன ஆனார் அவர்தானே ராணுவத்தின் தலைவர்

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    இதுபோன்ற உடையையும், தொப்பியையும் திமுகவின் உடன்பிறப்புகளுக்கு அணிவித்தால் எப்படி இருக்கும்னு நினைச்சு பார்த்தேன் சிரிச்சு சிரிச்சு வயித்துவலி வந்துடுச்சு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement