Load Image
dinamalar telegram
Advertisement

காங்., தலைவர் பதவி மீது கெலாட்டிற்கு ஆர்வமில்லை? திக்விஜய் சிங் போட்டியிட வாய்ப்பு!

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மாட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து, காங்., தலைவர் பதவி மீது அவருக்கு அவர்மில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், திக்விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்க உள்ளதாக தெரிகிறது.


காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் 17 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதில், அதிருப்தி குழுவான 'ஜி23' குழுவில் இடம்பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் களமிறங்க உள்ளது உறுதியாகி உள்ளது.

Latest Tamil News
அதேநேரத்தில், கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியிருந்தார். அதேநேரத்தில், ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில், அவரை முதல்வர் பதவியில் இருந்து விலகும்படி மேலிடம் அறிவுறுத்தியது.


தொடர்ந்து ஜெய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் சச்சின் பைலட்டை முதல்வராக்க கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை முதல்வராக்கினால் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த காங்., மேலிடத்திற்கு அசோக் கெலாட் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.


இது தொடர்பாக மேலிட தலைவர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர். இச்சூழ்நிலையில் அசோக் கெலாட் விரைவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Tamil News

இந்நிலையில், அசோக் கெலாட்டின் தீவர ஆதரவாளர்களாக உள்ள அமைச்சர்கள், அசோக் கெலாட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார். 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் நீடிப்பார். மாநிலத்தில் அவரது தலைமையின் கீழ் தான் பணியாற்றுவோம். அவர் பதவி விலகுவது குறித்து ஆலோசிக்கவில்லை. இன்றும், எதிர்காலத்திலும் அசோக் கெலாட் பதவி விலக மாட்டார் என உறுதிபட தெரிவித்தனர். இதனால், அசோக் கெலாட்டிற்கு தலைவர் மீது ஆர்வமில்லை என தெரிவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.


Latest Tamil News
இந்நிலையில், காங்கிரசின் மற்றொரு முன்னாள் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கும் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசி தரூரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் யார் என்பதில் திக்விஜய் சிங், மல்லிகார்ஜூனா கார்கே, கேசி வேணுகோபால் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளன. ம.பி.,யில் இருக்கும் திக்விஜய் சிங், இன்று இரவு டில்லி செல்வதாகவும், வரும் 30ம் தேதி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மல்லிகார்ஜூனா கார்கே வட்டாரங்கள் கூறுகையில், கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு அவர் கட்டுப்பாடுவார். மேலிடம் உத்தரவிட்டால், தலைவர் பதவிக்கு போட்டியிட மல்லிகார்ஜூனா கார்கே தயாராக உள்ளார் என்றனர்.
Latest Tamil News

தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும் மல்லிகார்ஜூனா கார்கே சரளமாக ஹிந்தி பேச வரும் என்பதால், ஹிந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


வாசகர் கருத்து (22)

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  என்ன ஒரு கேவலம் பாருங்க கட்சியில தலைவர் பதவி கொடுத்தாலும் வேணாம்டறாங்க பேசாம மௌன மன்மோகன் சிங்யே தேடி கண்டுபிடிச்சு போடுங்க. அவுரு தான் லாயக்கு, சொன்னபடி கேப்பாரு. பொம்ம போல நிப்பாரு கீ கொடுத்தா திரும்புவாரூ.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  பாவம் தலைவருக்கே ஆள் தேடும் நிலமை. காங்கிரஸ் மூழ்கும் கப்பல். கேப்டனை தேடுகிறது.

 • Dhandapani - Madurai,இந்தியா

  பேசாம போட்டியே வேண்டாம் சார் பிரியங்காவை தலைவரை ஆக்கிட்ட குடும்பதவிட்டு கட்சியும் போகாது, சரியாய் வரும் மாதாஜி யோசியுங்கள்

 • Fastrack - Redmond,இந்தியா

  சீதாராம் கேசரி தலைவராயிருந்தார்.. பதவியிலிருந்து விலக மறுத்த அவரை பாத்ரூமில் பூட்டி வைத்து சோனியா தலைவர் பதவி ஏற்றுக்கொண்டார் என செய்திகள்.

 • வீரா -

  NT திவாரி 93 வயதில் போய் சேர்ந்து விட்டார். இல்லையென்றால் அவரும் காங்கிரஸ் தலைமைக்கு இப்போது போட்டி போடுவார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்