Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை கோரிய திருமா: சுப்ரீம் கோர்ட்டுக்கு போகச்சொன்ன ஐகோர்ட்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது. உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழகம் முழுதும், 50 இடங்களில், அக்., 2ம் தேதி, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், பல்வேறு நிபந்தனைகளை விதித்து, செப்டம்பர் 28க்குள் அனுமதி வழங்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.


இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி, வி.சி., தலைவர் திருமாவளவன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, நீதிபதி இளந்திரையன் முன்பு முறையீடு செய்யப்பட்டது. 'ஏற்கனவே உத்தரவு பிறப்பித்த வழக்கில், பிரதிவாதியாக இல்லாத நிலையில், இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.


அவசர வழக்காக விசாரிக்க மறுத்து விட்டார். மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறை முடிந்த பின்னே விசாரிக்க முடியும் எனவும், தேவை என்றால், அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தினார்.
Latest Tamil News

இந்நிலையில், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான 2 நீதிபதி அமர்வு கூறுகையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய முடியாது.


திருமாவளவனின் மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல. குற்றவியல் சார்ந்த வழக்கு என்பதால் உச்சநீதிமன்றத்தில் தான் மேல்முறையீடு செய்ய முடியும் என உத்தரவு பிறப்பித்தனர்.


வாசகர் கருத்து (48)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    ஒட்டுப் பிச்சையெல்லாம் கிடையாது+++இப்போது குருமா கட்சி எல்லாமே தேச விரோத, ++அதாவது நடப்பதையெல்லாம் பார்த்தால் இயங்கி வரும் மற்றொரு அமைப்பு தான் அப்படீங்கராங்க.

  • அப்புசாமி -

    போங்க... போங்க. 5 லட்சம் தீட்டி அனுப்புவாங்க.

  • sankaseshan - mumbai,இந்தியா

    சிறுமைப்பட்ட சிறுத்தை பூனையான கதை

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ivan பொய் சாட்சி சொல்ல வேண்டிய ஏற்பாடுகளை செயதிருப்பான் .பங்களாதேஷ் இல்லே பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட வேண்டும்.

  • Soumya - Trichy,இந்தியா

    ஹாஹாஹா மூர்க்க கூட்டத்தின் ஓட்டுப்பிச்சைக்காக ஊளையிட்ட குருமா தேசத்துரோகிக்கு செம செருப்படி இவனோட கட்சியையும் நாட்டின் நலன் கருதி தடை செய்ய வேண்டும் அண்ணாமலை கூடிய விரைவில் அதை செய்வார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்