Load Image
dinamalar telegram
Advertisement

அக்டோபரில் 21 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ?

Tamil News
ADVERTISEMENT



நாடு முழுதும் வரும் அக்டோபர் மாதத்தில் முக்கியமான பண்டிகைகள், ஞாயிறு விடுமுறைகள் சேர்த்து , மொத்தம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபரில் ஆயுத பூஜை, தீபாவளி, மிலாது நபி, கர்வா சவுத் போன்ற பல பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது வழக்கமாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாகும். மேலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த பணிகளை, அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நாட்கள் (இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும்). :

1.அக்., 1 (சனிக்கிழமை) : அரை வருட கணக்கு முடிவு - சிக்கிமில் வங்கிகள் செயல்படாது.

2.அக்., 2 (ஞாயிற்றுக்கிழமை) : காந்தி ஜெயந்தி (தேசிய விடுமுறை)

3.அக்., 3 (திங்கள்) : துர்கா பூஜை - திரிபுரா, ஒடிசா,சிக்கிம், மணிப்பூர், ஜார்க்கண்ட், மேகலாயா, கேரளாவில் வங்கிகள் செயல்படாது.

4.அக்., 4 (செவ்வாய்) : ஆயுத பூஜை - அகர்தலா, கர்நாடகா,ஒரிசா, சிக்கிம், கேரளா,மஹராஷ்டிரா, மே.வங்கம், உத்தரப்பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேகாலயா மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.

5.அக்.,5 (புதன்) : விஜயதசமி,ஆயுத பூஜை - மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் செயல்படாது.

6.அக்.,6 ( வியாழன்) : சிக்கிம், கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை

7.அக்.,7 (வெள்ளி ) சிக்கிம், கேங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை

8.அக்.,8 (சனிக்கிழமை) : மிலாது நபி (ம.பி., ஜம்மு, கேரளா,ஹிமாச்சல் மாநிலங்களில் விடுமுறை).

9.அக்.,13 (வியாழன்) : கர்வா சவுத் பண்டிகை ( சிம்லாவின் வங்கிகளுக்கு விடுமுறை.

10.அக்.,14 (வெள்ளி) : ஜம்மு, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.
Latest Tamil News
11.அக்.,24 (திங்கள்) : தீபாவளி பண்டிகை (சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர் தவிர அனைத்து மாநிலங்களில் விடுமுறை).

12.அக்.,25 ( செவ்வாய்) : சிக்கிம், தெலுங்கானா, மணிப்பூர், ராஜஸ்தானில் வங்கிகளுக்கு விடுமுறை.

13.அக்.,26 (புதன்) : கோவர்த்தன் பூஜை : குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர்காண்ட், சிக்கிம், ஜம்மு, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல், ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை.

14. அக்.,27 (வியாழன்) : சிக்கிம், மணிப்பூர், மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் வங்கிகள் செயல்படாது.

15. அக்., 31 (திங்கள்) : குஜராத், பீஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.


வாசகர் கருத்து (8)

  • S Chandrasekhar - சென்னை,இந்தியா

    தலைப்பு சரியில்லை. ஸ்டேட் வாரியாக காலம் பட்டியல் போட்டிருந்தால் உதவும்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நான் பணிபுரிந்த அத்தியாவசிய சேவை நிறுவனம் ஆண்டிற்கு நான்கு நாட்கள் மட்டுமே விடுமுறை.. அந்த நான்கு நாட்களிலும் மூன்றுநாள் மின் சாதனங்கள் பராமரிப்பு என்று பராமரிப்புத்துறை ஊழியர்கள் பனி புரிவோம் .அரசு பனி வாங்கிப்பணியாளர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்

  • Prince - Chennai,இந்தியா

    தெளிவான விபரம் உள்ளே உள்ளது போல தலைப்பும் இருக்க வேண்டும். இல்லையெனில் அவசியமாக செய்தியும் அணாவிசயம் ஆகி விடும்.

  • Murali - ,

    only 3 holidays in reality. why this foolish news???

  • அநாமதேயம் - ,

    முட்டாள்தனமான தலைப்பு நாளிதழ் கொடுத்து உள்ளது.எல்லா இடங்களிலும் 21, நாள் விடுமுறை என்று பொருள்படும் வகையில். சனி ஞாயிறு கிழமை களில வரும் பண்டிகைகள் எல்லாம் தனித்தனியாக இருப்பதைக் போல உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement