Load Image
Advertisement

கழிவெளி குடியிருப்புகளால் வெள்ள அபாயம்?திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்கள் அச்சம்!

 கழிவெளி குடியிருப்புகளால் வெள்ள அபாயம்?திருவொற்றியூர் மேற்கு பகுதி மக்கள் அச்சம்!
ADVERTISEMENT
திருவொற்றியூர், :வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில், கழிவெளி நிலத்தில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளால், திருவொற்றியூர் மேற்கு பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என, சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ௩௦க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. அம்பேத்கர் நகர், கலைஞர் நகர், சிவசக்தி நகர், சரஸ்வதி நகர், கலைவாணர் நகர் உள்ளிட்டவை இங்கு அமைந்துள்ளன.


ராஜா சண்முகம் நகர், பூம்புகார் நகர், காட்டு பொன்னியம்மன் நகர், சுப்ரமணியம் நகர், சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் போன்றவற்றில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.வடக்கே மணலி விரைவு சாலை, கிழக்கே ரயில்வே தண்டவாளம், தெற்கே மாட்டுமந்தை மேம்பாலம், மேற்கே பகிங்ஹாம் கால்வாய் தடுப்பு சுவர் என, உயரமான எல்லைகளைக் கொண்டுள்ளது, திருவொற்றியூர் மேற்கு பகுதி. மழைக்காலங்களில் மேற்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கும். இந்த மழை நீர் கால்வாய்கள் வழியாக, கார்கில் நகர் கழிவெளி புறம்போக்கு நிலத்திற்கு வந்து, மதகுகள் வழியாக பகிங்ஹாம் கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கும் வகையில் அமைப்பு உள்ளது. கடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, மேற்கில் ௫ அடி உயரத்திற்கு தேங்கிய வெள்ளநீர், இந்த கழிவெளி நிலம் வழியாகத் தான் வெளியேறியது.


இந்நிலையில், கார்கில் நகர், ராஜாஜி நகர் போன்ற பகுதிகளில் கழிவெளி நிலத்தை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருப்பதால், மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனக் கூறி, மாநகராட்சி சார்பில் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, வீடுகளை காலி செய்ய அறிவுறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில், 2018ம் ஆண்டு, கார்கில் நகர் கழிவெளி புறம்போக்கு நிலமருகே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 130 கோடி ரூபாய் செலவில், 1,200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், நான்கு தொகுப்புகளாக கட்டும் பணி துவங்கியது.ஆரம்பத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு விட்டால், மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் என, பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுநலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பின்னாளில் எதிர்ப்புகளும், போராட்டங்களும் நீர்த்துப் போய் விட்டன.இதனிடையே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் முழுதுமாக முடிந்து, கட்டடங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



விரைவில், குடியிருப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.இந்நிலையில், 2015ல் ஏற்பட்டது போல் பெருவெள்ள பாதிப்பு நிகழ்ந்தால், மேற்கு பகுதியில் தேங்கும் வெள்ளநீர் வடிவதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், பெரும் சிக்கலாக அமைந்து விடும்.இது தவிர, மேற்கு பகுதியின் ஒட்டுமொத்த மழை நீரும், கார்கில் நகரை நோக்கி வெளியேறும் நிலையில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement