Load Image
Advertisement

பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாகேப் பால்கே விருது

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி : பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்திய சினிமாவின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகையாக மட்டுமல்லாது இயக்குனராக, தயாரிப்பாளராகவும் இவர் முத்திரை பதித்துள்ளார்.

இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாத சாகேப் பால்கேவின் நினைவாக திரைத்துறையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் இதற்கு முன் இந்த விருதை பிருத்விராஜ் கபூர், எல்.வி.பிரசாத், சத்யஜித் ரே, நாகிரெட்டி, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், திலீப் குமார், ராஜ்குமார், டி.ராமநாயுடு, கே.விஸ்வநாத், சிவாஜி கணேசன், கே. பாலச்சந்தர், அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏகப்பட்ட கலைஞர்கள் வென்றுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த விருது நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

மும்பையில் பிறந்த ஆஷா பரேக் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். பிறகு 1959ல் ‛தில் தேக்கே தேகோ' என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கன்காட், ஜப் பியார் கிசி சே ஹோதா ஹே, சய்யா, மெரி சூரத் தெறி ஆங்கன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ஹிட் பட நாயகியாகவும், 1960-70 காலக்கட்டத்தில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் வலம் வந்தார். ஹிந்தி மட்டுமல்லாது பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவில் வலம் வந்த இவர் இந்திய திரைப்பட துறையின் தணிக்கை குழுவில் முதல் பெண் தலைவராக பதவி வகித்துள்ளார். இப்படி சினிமாவில் பல துறைகளில் சாதித்த ஆஷா பரேக்கிற்கு கடந்த 1992ல் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இப்போது மற்றுமொரு கவுரவமாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (4)

 • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

  ஆஷா ப்ரேக் தென்னிந்திய கலையான பரத நாட்டியத்தை நன்றாக பயின்றவர் . பல தென்னிந்திய கலைஞ்சர்களுடன் ( என் தூரத்து உறவு மாமாவும் அவர்களில் ஒருவர் ) உலகின் பல நாடுகளுக்கு சென்று நம் கலாச்சரத்தை பரப்பி பல இந்திய நடன பள்ளிகள் தொடங்க காரண மாணவர் . இந்திய திரைப்படங்களால் நமக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி மிக கணிசமானது . இத்தகைய கலைஞ்சர்களை கவுரவிக்கும் நேரம் உலகம் முழுதும் அவர்கள் பெயர் பரவி அது மேலும் அதிகரிக்கிறது நம் ரஹ்மான் ஆஸ்கார் வென்ற பின் பல வெளிநாட்டு படங்களுக்கு இசையமைப்பது போல

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பி.சுசீலா ஜானகி போன்றோருக்கு விருது அளிக்கவேண்டும்

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  திரைத்துறைக்கு அரசுகள் கொடுக்கும் பரிசுகளும் விருதுகளும் சலுகைகளும் மிகமிக அதிகம். அவர்களால் நாட்டுக்கு என்ன பயன்?

 • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

  போண்டா மணிக்கு எல்லாம் கிடையாதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்