Load Image
Advertisement

நான் ஒருவன்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள சொன்னேன்: திமுக எம்.பி.,யின் வாக்குமூலம் வைரல்

 நான் ஒருவன்தான் கட்சிக்காரர்களை மணல் அள்ள சொன்னேன்: திமுக எம்.பி.,யின் வாக்குமூலம் வைரல்
ADVERTISEMENT

நாமக்கல்: 'நான் ஒருவன் தான் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ள சொல்கிறேன்' என திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரலாகியுள்ளன.


தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி, 'திமுக ஆட்சிக்கு வந்து, முதல்வராக ஸ்டாலின் கையெழுத்துப் போட்ட அடுத்த நொடியே, மாட்டு வண்டி உரிமையாளர்கள், ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளலாம். அதை யாரும் தடுக்க முடியாது. அப்படியே தடுக்கும் அதிகாரிகள் இங்கே பதவியில் இருக்க முடியாது' எனப் பேசியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பிறகு திமுக தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியில் அமர்ந்தது. தற்போதும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்வதாக கூறப்படுகிறது.

Latest Tamil News
இந்த நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகவும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜேஷ்குமார் தற்போது மணல் அள்ளுவது குறித்து பேசியது சர்ச்சையாகி உள்ளது. வீடியோவில் திமுக எம்.பி.,யான ராஜேஷ்குமார், மணல் அள்ளும்போது கட்சியினருக்குள் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சமரசம் பேசுகிறார்.


அதில், 'எந்த மாவட்ட செயலாளரும் கட்சிக்காரர்களையும் கூப்பிட்டு மணல் அள்ளுங்கள் என்று சொல்வதே கிடையாது. நான் ஒருவன் தான் சொல்கிறேன். மற்ற அனைத்து மாவட்ட செயலர்களும் கம்பெனிக்கு மணல் அள்ள அனுமதி கொடுத்துவிட்டு பணம் வாங்கி கொள்கின்றனர்' எனப் பேசுகிறார். அவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.


வாசகர் கருத்து (23)

 • raja - Bangalore,இந்தியா

  நல்ல மனுஷன்யான்னு கொத்தடிமைகள் கூவ, தமிழ்நாடே காரித்துப்ப.. விடிஞ்சது போ.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  'நான் ஒருவன் தான் கட்சிக்காரர்களை கூப்பிட்டு மணல் அள்ள சொல்கிறேன்' என திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பேசிய வீடியோ வைரலாகியுள்ளன. இதைவிட பெரிய ஆதாரம் எண்ணவேண்டும் நீதிமன்றத்துக்கு இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க...? போதாதற்கு "அதை யாரும் தடுக்க முடியாது." என்றும் தெனாவட்டாக, மற்றவர்களை பயமுறுத்தும் படி பேசி இருக்கிறார். ஆகையால், கணம் நீதிபதி அவர்களே உடனே இவர் மீது நடவடிக்கை எடுக்கவும்.

 • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

  தமிழ், தமிழன் என்கிற அநேக டுபாக்கூர் பெயரில் உலாவரும் தீய மூர்க்க சக்திகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இது நாட்டாமையின் தீர்ப்பு..

 • Kudandhaiyaar - kumbakonam,இந்தியா

  இருபது வருடத்திற்கு தேர்தல் கிடையாது. கவலை வேண்டாம். இந்த மாதிரி திரித்து பேசி ஒட்டி எதிர் கட்சி சதி என்று முதல்வர் அறிக்கை விடுவார். அனைவரும் வேலையை பாருங்கள். இனி தி மு க வை பற்றி விமர்சனம் செய்ய செய்ய ஆயுள் கூடும். இருபதை முப்பது ஆக்கி விடாதீர்கள். தி மு க வை அசைக்க இனி யாராலும் முடியாது (மக்கள் இருபது வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டு விட்டார்கள்) விமர்சனம் செய்து உங்கள் முகவரியை இழந்து விடாதீர்கள்

 • Duruvesan - Dharmapuri,இந்தியா

  பாஸ், குவாட்டர் பிரியாணி 2000 ஓட்டுக்கு ஹிந்து அடிமைகளுக்கு குடுத்ததை எடுக்கணும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்