ADVERTISEMENT
சென்னை: அதிமுக.,வின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், சில நாட்களாக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராகவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தார். சசிகலாவையும் பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்தார். இந்நிலையில், அதிமுக.,வின் அமைப்புச் செயலாளராக அவரை நியமித்து ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி, பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். 'கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், அதிமுக சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும், பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று (செப்.,27) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்' என இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (8)
ஒருகாலத்தில் பாமக வில் சேர்ந்து பின் அதில் இருந்து ராமதாஸை நீக்கியவர் பண்ருட்டியார்
சிரிப்பூ சிரிப்பு ....................சிரிப்பு கட்டாதிங்க பழனி சார்
பண்ருட்டியாரா இப்படி செய்தார் ?
பண்ருட்டியாரின் வரலாறு தெரியாமல் நீக்கி விட்டார்கள் அவரு பலாப்பழம் போல
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
குப்பையில் போட வேண்டியதுதான்