உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணை: நேரலையில் ஒளிபரப்பு
புதுடில்லி: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்கு இன்று (செப்.,27) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, 'வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது. இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, இன்று செப்., 27 முதல் 'யு டியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
நேரடி ஒளிபரப்பு:
டில்லி அரசு - மத்திய அரசு இடையேயான அதிகாரம், மகாராஷ்ட்ரா அரசியல் தொடர்பான வழக்குகளையும் நேரலையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் பொருமாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து (2)
வீட்டில் மின்சாரம் இல்லை, குடிநீர் வரவில்லை,மருத்துவர் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை, பள்ளியில் கவனக்குறைவு , பேருந்து நிற்கவில்லை, வாய்க்கால் பிரச்சனை, தனிப்பட்ட குடும்பங்களுக்கு இடையே பிரச்சனை, அரசியல் காழ்ப்புணர்ச்சி ,. தீவிரவாதிகள் மீது நடவடிக்கை, மொழி, ஜாதி, மதம் இவைகளுக்கேயெல்லாம் தீர்வு இன்று நடுத்தெருவில்தான் . எதுவாக இருந்தாலும் மக்கள் வரிப்பணத்தில் வாழும் எந்த துறை அதிகாரிகளும் எதற்கும் அஞ்சுவதில்லை, பொதுமக்கள் நடந்து நடந்து கால் தேய்ந்து , மரியாதை கேட்டு, ஆதிண்டுக்கணக்கில் நடையாய் நடந்தாலும் எதுவுமே நடக்காததால் போக்குவரத்து மறியல், இரயில் மறியல் என்ற நிலைக்கு வந்தால்தான் தீர்வு என்று வந்து விட்டது. முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டியது தனி மனிதனின் புகாருக்கு மரியாதை அளிக்காத அந்த துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுதான் ஒரே தீர்வு. தனி ஒருவனின் செயலால் சமுதாயம் பாதிக்கப்படுகிறது . முதலில் சட்டத்தை அரசு ஊழியர்கள் மதிக்கவேண்டும் என்ற சட்டம் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமே வரும், நேர்மையாக பணியாறுவோருக்கு இது பொருந்தாது. யாருமே நீ யார் என்னை கேட்பதற்கு என்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது / ஆகவே இனியும் வேடிக்கை பார்க்காமல், நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு பிறக்கும், தனி மனிதராகட்டும், சமுதாயமாகட்டும் எந்த நீதிமன்றத்துக்கும் கட்டுப்படுவதில்லை, சமீபத்தில் நடந்த விவசாயப் போராட்டங்களே சான்று, போராடியவர்களைக் குறைகூறவில்லை மாறாக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் அவர்கள் வெற்றிபெறும்வரை போராடியது அவர்களுக்கு வெற்றி, ஆனால் ஜனநாயகத்துக்கு? இதே வழியை எல்லோரும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள், தனிமனித ஒழுக்கம் கேட்டுவிட்டதால் அவர்கள் பேச்சு, செயல்பாடு, நடத்தை, எல்லாமே சமுதாயத்தையே தலைகீழாக மாற்றிவிட்டது, இனியாவது மக்கள் மதிக்கும்படி அரசும், மக்களுக்கான அரசாக மற்றும் வழியில் நீதிமன்றமும் இனைந்து செயல்பட்டால் நல்லது, நல்லவழி பிறக்கும், வந்தே மாதரம்
நீண்டகால விளைவுகளைப்பற்றி கவலை இல்லாமல் எடுத்த முடிவுகளால் ஏற்கனவே பட்டது போதும். உச்சநீதி மன்ற நேரடி ஒளிபரப்பு பெரும் வன்முறைகளை உண்டாக்கும் நாள் வரும். CAA வன்முறைக்குக் காரணம், ஒவைஸி போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் ஆடிய வெறியாட்டம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதுதான்.