Load Image
dinamalar telegram
Advertisement

திமுக பற்றி ஈ.வெ.ரா பேசியது என்ன?: போட்டு உடைத்து ‛பகீர் கிளப்பிய அண்ணாமலை: வீடியோ வைரல்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: திமுக எம்.பி., ஆ.ராஜா அவ்வப்போது ஹிந்து மதம் குறித்தும், ஹிந்துக்கள் குறித்தும் இழிவாக பேசுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார். இதற்கு திமுக தலைமை கண்டிக்காமல், அவரது பேச்சை மவுனத்தின் மூலம் ஊக்கப்படுத்துவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.


சமீபத்தில் கூட, 'ஹிந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன்; ஹிந்துவாக இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்?' என கடுமையான சொற்களை பயன்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.


அதுமட்டுமல்லாமல், ஹிந்துக்கள், ஹிந்து மதத்திற்கு எதிராக தான் கூறும் கருத்துகளை எல்லாம் கூறி பிரச்னையை உருவாக்கிவிட்டு, இதை நான் சொல்லவில்லை, ஈ.வெ.ராமசாமி சொன்னார், அவருடைய புத்தகத்தில் சொல்லிருக்கிறார் என கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ஆ.ராஜா.


இது ஒட்டுமொத்த ஹிந்துக்களிடையே எதிர்ப்பும், கண்டனமும் வந்தாலும், கவலையேபடாமல், மற்றொரு சர்ச்சைக்கு தயாராகிவிடுவார். அந்த வகையில், ஆ.ராஜா மேற்கொள் காட்டிய ஈ.வெ.ராமசாமி புத்தகத்திலேயே திமுக பற்றியும், அக்கட்சியினரின் ஓட்டு அரசியல் பற்றியும் ஈ.வெ.ராமசாமியே கடுமையான சொற்களால் விமர்சித்துள்ளார்.


இதனை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராஜா ஸ்டைலிலேயே சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது:


நான் ஆ.ராஜாவிற்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கேட்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் பேசுகிற அனைத்தும்கூட ஈ.வெ.ராமசாமி சொன்னார், ஈ.வெ.ராமசாமி புத்தகம், ஈ.வெ.ராமசாமி உடைய புத்தகம் மரண சாசனம், ஈ.வெ.ராமசாமி இறுதி பேருரையில் இருக்கிறது, என்று நீங்கள் ஒரு புத்தகத்தை காண்பித்தீர்கள்.


அதே புத்தகத்துல 21வது பக்கத்துல இருந்த சில விஷயங்களை ஆ.ராஜா அவர்களுக்கு இந்த மேடையில் இருந்து படித்து காண்பிக்கின்றேன். அதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா என்பதை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டும். ஈ.வெ.ராமசாமி சொல்லி இருப்பதை படிக்கிறேன் பாருங்கள்.

Latest Tamil News

'நாதி இல்லையே.. சொல்கிறதற்கு நாதி இல்லையே... சிந்திக்க நாதி இல்லையே! ஒரு ஓட்டுக்கு என்னென்ன கொடுக்கிறான்? பெண்டாட்டியைத் தவிர மத்தது எல்லாத்தையும் கொடுக்கிறான் (கூட்டத்தினர் ஆரவாரம் செய்கின்றனர்) - ஓட்டு வாங்குவதற்கு, இதற்கு கவலையே படமாட்டேன் என்கிறானே! யாரது? நம்ம முன்னேற்றக் கழகத்துக் காரன்தான். (திமுகவைத் தான் இப்படி குறிப்பிடுகிறார்). மற்றவனை எல்லாம் - என்னை எல்லாம் வைவான் 'இவனுக்கு ஏன் இதுவெல்லாம் கேடு வந்துச்சு இந்த முன்னேற்றக்காரனுக்கு?

Latest Tamil News
இந்த வேலையை ஏன் பண்ணிக்கிட்டு இருக்கிறான்? அவனுக்கு ஓட்டுதான் பெரிது.. அவன் பெண்டாட்டி, பிள்ளையைப் பற்றி அவனுக்குக் கவலை இல்லை. இன்னும் கொஞ்சநாள் போனால், இது வழக்கத்தில் வந்து விடும் என்று நம்புகிறான்.. - பெண்டாட்டியைக்கூடக் கொடுத்து, வாங்குகிறார்போல, ஏனென்றால் அந்த பதவி அவ்வளவு உயர்வாப் போச்சு...' என பக்கம் 21ல் நீங்கள் சொன்ன ஈ.வெ.ரா, நீங்கள் காட்டிய அதே புத்தகத்திலே இதை எழுதியிருக்கிறார்.


இது நீங்க சொன்ன அதே மாதிரி நானும் பேசுறேன். இது நான் சொல்லல, ஈ.வெ.ராமசாமி தான் சொன்னாரு. அண்ணன் ஆ.ராஜா அவர்கள் இதற்கும் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (400)

 • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

  காலங்கள் அழிவில் தான் இந்த தமிழினத்தின் முன்னேற்றம் இருக்கு...

 • Balaji - Chennai,இந்தியா

  இந்த செய்தி இன்னும் சில நாட்களுக்கு முதல்பக்கத்தில் முதல் செய்தியாக ட்ரெண்டிங் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. தினமலர் தமிழனுக்கு செய்யும் நன்மை அது.. தயவுசெய்து செய்யுங்கள்..

 • ... - ,

  எங்கடா அந்த வீரமணி, சுப வீ எல்லாம்.. மிச்சர் சாப்பிடுராங்களா.. இதுக்கு தான் பெண்களின் தாலியை அறுத்தீங்களா....

 • ... - ,

  திமுக... பேஜ் 21 ஐ பற்றி வாயே திறக்காமல் இருப்பதை பார்த்தால் அது உண்மை தான் எண்பது உறுதியாகியுள்ளது... மூணு நாளா மூடிகிட்டு இருக்காங்க...

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //.... ஏற்றத்தாழ்வு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது.....//உன் மத மாற்றி மதத்தில் உள்ள கணக்கிலாடங்க ஏற்றத்தாழ்வு எவன் உருவாக்கினான்? இனம் நிறம் மொழி என்று அத்தனை வகையிலும் உலகெங்கும் பழங்குடிகளை மொத்தமாக அழித்த கேடு கெட்ட மதம்.. அதுக்கு பதில் சொல்லு ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்