Load Image
dinamalar telegram
Advertisement

லோக்சபா தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல்: தமிழக அரசுக்கு பா.ஜ., அண்ணாமலை எச்சரிக்கை


கோவை: ''தமிழகத்தில் இதேநிலை தொடர்ந்தால் வரும் லோக்சபா தேர்தலோடு சட்டசபைக்கும் தேர்தல் வரும் நிலை உருவாகும்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

Latest Tamil News

தி.மு.க., அரசின் ஹிந்து விரோத நடவடிக்கையை கண்டித்து பா.ஜ., சார்பில் கோவை, சிவானந்தா காலனியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
தமிழகத்தில் கோவை உட்பட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய, 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ., இயக்கங்களை சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ., நடத்திய சோதனையில் பி.எப்.ஐ., அமைப்பை சேர்ந்த, 105 பேரை கைது செய்துள்ளனர். இதில், 11 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.


கேரள மாநிலம் மலப்புரத்தில் புகுந்து பல பயங்கரவாதிகளை சி.ஆர்.பி.எப்., கைது செய்துள்ளது; அதேபோல், தமிழகத்திலும் நடக்கும். இதற்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை. தமிழக முதல்வருக்கு, சி.ஆர்.பி.சி., மற்றும் 'இண்டியன் பீனல் கோடு' பற்றி தெரியுமா என, தெரியவில்லை. ஆனால், எனக்கு தெரியும். மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.

Latest Tamil News
தமிழத்தில் தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். தமிழக அரசு மட்டுமல்ல, எந்த அரசும் காப்பாற்ற முடியாது. முதல்வர் ஒன்றும் கடவுள் கிடையாது. அவர் தன்னை அப்படி நினைத்துக் கொண்டு இருக்கிறார். முதல்வர் தனது அறிக்கையில் 'பா.ஜ.,வினர் எதாவது செய்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து விட நினைக்கின்றனர்' என, குறிப்பிட்டு இருக்கிறார். ஆமாம், நாங்கள் ஆட்சிக்கு வர நினைப்பது உண்மைதான்.

இங்கு மதுவுக்கு அடிமையாகி, 1.10 கோடி பேர் உள்ளனர். அவர்களை மீட்கவும், தி.மு.க., அமைச்சர்களின் வசூல் வேட்டையை தடுக்கவும், கனிமவள கொள்ளையை நிறுத்தவும் நாங்கள் ஆட்சிக்கு வரவிரும்புகிறோம். பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். தி.மு.க., ஆர்.எஸ். பாரதி எத்தனை முறை பட்டியல் சமூக மக்களை தவறாக பேசி இருக்கிறார்.


Latest Tamil News
தி.மு.க., அமைச்சர்கள் ராமசந்திரன், ராஜகண்ணப்பன் போன்ற பலர் ஜாதிப்பெயரை சொல்லி திட்டி உள்ளனர். அவர்களை ஏன் கைது செய்யவில்லை. தமிழகத்தில் இதே நிலை தொடர்ந்தால் வரும் லோக்சபா தேர்தலோடு, சட்டசபைக்கும் தேர்தல் வரும் நிலை உருவாகும். நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (73)

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  . கட்சியை வளர்க்கணுமுல்லெ..

 • Vidhnup Priya -

  0 //////

 • Yogeshananda - Erode,இந்தியா

  நடக்கும்... திராவிட மாடல் திருட்டு பித்தலாட்ட ஃப்ராட் பொருக்கி அயோக்ய ரௌடி கொள்ளைக்கார கும்பலின் ஆட்சியை பார்த்தால் 2024 முன்பே தேர்தல் வந்துவிடும்.....

 • J. G. Muthuraj - bangalore,இந்தியா

  அதே தேர்த'லோடு'... தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு ஓடு/மூடு விழா...

 • neo - Nagercoil,இந்தியா

  மோடி சொன்னாலும், இந்த அண்ணாமலையால ஒன்னும் முடிக்க முடியாது. வட நாட்டுல போய் பேசுறா மாதிரி இங்க பேசாதீங்க அப்பு, காமெடி பீசு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்