Load Image
dinamalar telegram
Advertisement

மயிலாடுதுறை:கள்ளச்சாராய விற்பனை அமோகம்

Tamil News
ADVERTISEMENT

மயிலாடுதுறை:கோனேரிராஜபுரம் பகுதியில் பொதுவெளி யில் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்படும் நேரடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் அருகில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடத்திவரப்படும் பாண்டி சாராயம் ஆகியவை விற்பனை வெகுவாக நடைபெற்று வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுத்தாலும் கடத்தி வரப்படும் சாராய விற்பனை கிராமப்புறங்களில் சமூகமாக நடைபெற்று வருகின்றது.


குத்தாலம்தாலுகா பாலையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கோனேரிராஜபுரம் பகுதியில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட பாட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக்கில் ரூ. 200 விற்கப்படும் மதுபான வகைகள் விலை அதிகமாக உள்ளதால் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் சாராயம் ஒரு பாட்டில் ரூ 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சாராயம் விற்பனை செய்து வந்த சுதாகர் என்பவரை சமீபத்தில் பாலையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருந்தபோதும் சுதாகரின் தம்பி சூர்யா என்பவர் தற்போது அதே பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள் இது தொடர்பாக நேரடியாக கடத்தல் சாராயம் விற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (6)

  • Girija - Chennai,இந்தியா

    டாஸ்மாக்கில் குறைந்த விலை மதுபானங்களை விற்பதில்லை என்பதால் குடிமகன்கள் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. எத்தனை குடும்பங்களை இருட்டில் தள்ளுவதற்கும், எத்தனைபேர் கண்களை பொட்டையாக்குவதற்கும் இந்த விடியல் அரசு காத்திருக்கிறதொ. எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே கரூரர்காரா ...........

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    என்னமோ கள்ளச் சாராயத்தை ஒழிக்கத்தான் டாஸ்மாக்கை நடத்துவதாகச் சொன்னார்கள். எல்லாம் பொய்யா கோப்பால்?

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    குடிகாரனுகள மது ஆர்வலர்கள்ன்னு சொல்ற மாதிரி இனி செய்திகளில் கள்ளச்சாராயத்தையும் தன்னார்வல சாராயம்ன்னுதான் சொல்லணும்ன்னு யாரும் நரம்பு புடைக்க கத்தலயா?.....

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    எனக்கொரு உண்மை தெரிச்சாகனும்... அரசு பள்ளிக்கூடம் தனியார் பள்ளிக்கூடம்ன்னு சொல்றோம்... அதுபோல ஹிஹி..... அரசு சாராயம், தனியார் சாராயம்ன்னு சொல்ல கூடாதா?.... கூடாதுன்னா கள்ளச்சாராயம் போல இனி கள்ளபள்ளிக்கூடம்னு சொல்லலாமா? ....

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள் இவர்கள் எல்லோரையும் காவல் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு தெரியும். சொல்லப்போனால், அவர்களில் ஒரு சிலர் அந்த 'வாங்குபவர்கள்' லிஸ்டில் இருக்கலாம். அதை விடுக்கங்க இப்போதைக்கு. ஆக, தயாரிப்பவர்கள், விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது, இந்த காவல்துறை ஆட்சியில் உள்ளவர்களுக்கு பயப்படாமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement