அதிமுக அலுவலக கலவர வழக்கு: ஓபிஎஸ் ஆதரவாளர்களிடமிருந்து 113 ஆவணங்கள் மீட்பு
சென்னை: அதிமுக அலுவலக கலவர வழக்கில் எடுத்துச் சென்றதாக கூறப்படும் 113 ஆவணங்களும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெ ரிவித்துள்ளனர்.

கலவரம்:
அதிமுக., ஒற்றை தலைமைக்கோரி, கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த நாளில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ்க்கு எதிராக ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் 4 கலவர வழக்குகள் பதிவானது.
சண்முகம் மனு:
இந்த வழக்குகளை சிபிஐ அல்லது வேறு அமைப்பிற்கு மாற்றக்கோரி முன்னாள் அமைச்சர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்தார். இதையடுத்து 4 கலவர வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து, சிபிசிடிக்கு மாற்றிய பிறகும் விசாரணை துவங்கப்படவில்லை. குற்றச்செயல் நடந்த இடத்தை பார்வையிடவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்., 6ம் தேதி கூடுதல் மனு அளித்தார்.
சிபிசிஐடி விசாரணை:
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் இருதரப்பினரின் ஆதரவாளர்கள், அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, கடந்த செப்.,22ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க, இரு தரப்பினருக்கும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியும் விசாரணை மேற்கொண்டனர்.
113 ஆவணங்கள் மீட்பு:
இந்நிலையில் அதிமுக அலுவலக கலவர வழக்கில் எடுத்துச் சென்றதாக கூறப்படும் 113 ஆவணங்களும் மீட்கப்பட்டதாக இன்று(செப்.,26) சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பழனிசாமி ஆய்வு:
அதிமுக அலுவலகத்தில் கலவர நடந்த போது, எற்பட்ட சேதங்களை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இது குறித்து இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
வாசகர் கருத்து (7)
அ.தி.மு.க எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட திராவிட கட்சி . எடப்பாடி,பன்னீரும். ஏதாயிருந்தாலும் டெல்லிக்கு ஓடுறானுங்களே. இவர்களுக்கெல்லாம் சுய மரியாதையே கிடையாதா. முதுகெலும்பு.கிடையாதா,இந்த அரசியல் கோமாளிகளை வைத்து தமிழ் நாட்டுல. போஸ்ட்டுமேன் மூலமா பிஜேபி உள்ள வந்துடலாமுன்னு நினைச்சா அது ஒரு காலமும் தமிழ் நாட்டில் நடக்காது,
இந்த உட்கட்சி கலவர வழக்குகள் ஐந்து ஆண்டுகள் நீடித்து பிறகு அது சாம்பலாகிவிடும். அதற்குள் அடுத்த பொதுத்தேர்தல் வந்து திராவிட மாடல் ஆட்சி திரும்ப வருவதற்கு ஏதுவாகும் நிலைமை உண்டாகும். இது ஆறுமுக சாமி கமிஷன் போலத்தான் ஆகும்
திருடி சென்றவர்களுக்கு தண்டனை உண்டா அல்லது திருப்பி கொடுத்து விட்டதால் அணில் போல உத்தமர் ஆகி திருட்டு கழகத்தில் இனைந்து சேவை செய்வார்களா?
சொந்த கட்சி அலுவலகத்தை சூறையாடி திருடி சென்ற ஒரே தானை தலைவன் பன்னீர்தான்.