ADVERTISEMENT
கோவை : நீலகிரி எம்.பி. ஆ.ராஜாவின் இந்து விரோத பேச்சு கோவையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் கோவை மாவட்ட பா.ஜ. தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கைது ஆகியவற்றை கண்டித்து பா.ஜ. சார்பில் இன்று மாலை டாடாபாத்- சிவானந்தாகாலனி ரவுண்டானாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை பா.ஜ. எம்.எல்.ஏ. வானதி மாநில பொது செயலாளர் முருகானந்தம் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் ''அறிவாலயத்தை சேர்ந்த ஒரு எம்.பி. பிற சமூகங்களை திருப்திபடுத்த ஒரு சமூகத்தின் மீது ஒரே நோக்கத்தில் மீண்டும் மீண்டும் வெறுப்பை கக்கியுள்ளார். தமிழகத்தை சொந்தம் கொண்டாடும் இதுபோன்ற அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' என்றார்.
போலீஸ் தரப்பில் விசாரித்த போது 'ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரும் மனு தற்போது (நேற்று மாலை) தான் வந்துள்ளது. பரிசீலித்து வருகிறோம்' என்றனர்.
தி.மு.க., - எம்.பி., ராஜாவை கண்டித்து, கடந்த வாரம், ஹிந்து முன்னணி சார்பில், கோவை பீளமேடு பகுதியில் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.இதையடுத்து, பா.ஜ., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று கோவை வந்த பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, உத்தம ராமசாமி வீட்டுக்கு சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர், ரத்தினபுரி பா.ஜ., மண்டல் தலைவர் மோகன் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட மண்டல் நிர்வாகிகள் வீடுகளுக்கு சென்றும் ஆறுதல் கூறினார்

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
விரைவில் மக்கள் விரோத அரசுக்கு ஒரு முடிவுகட்டவேண்டும்