மின் வினியோகம் பாதிக்க கூடாது!
சென்னை : ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் அறிவித்துள்ளதால், மின் வினியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு, மேற்பார்வை பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய பணியமைப்பு பிரிவு தலைமை பொறியாளர், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சில கோரிக்கைகளை முன்வைத்து, மின் வாரிய தலைமை அலுவலகம், மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த நாளில் தடையில்லா மின்சாரம் மற்றும் சொத்து உடைமைகளின் பாதுகாப்பு குறித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.ஊழியர் வருகை பதிவு விபரங்களை, காலை 10:45 மணிக்கு முன், மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!