Load Image
dinamalar telegram
Advertisement

மதுரை தி.மு.க., மா.செ., தேர்தலில் பணமழை; அழகிரியா, பா.ஜ.,வா என ஊசலாட்டம்

Tamil News
ADVERTISEMENT


மதுரை : தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் மதுரை நகர செயலாளர் தேர்தலில் 'பண மழை' பொழிந்து பகுதி செயலாளருக்கு ரூ.5 லட்சம், மாவட்ட பிரதிநிதிக்கு ரூ.1 லட்சம் வாரியிறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் மனவேதனையடைந்த மூத்த நிர்வாகிகள் மீண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை சந்தித்து முறையிடலாமா அல்லது பா.ஜ., பக்கம் சாய்ந்து விடலாமா என ஊசலாட்டத்தில் உள்ளனர்.


தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக 72 மா.செ., உள்ள நிலையில் மதுரை உட்பட 8 மாவட்டங்களில் தலா இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒன்று வீதம் ஒருங்கிணைந்த மாவட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மதுரையில் நகர் பகுதியில் இருந்த இரண்டு மாவட்டம் ஒன்றாக ஆக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நகர் வடக்கு மா.செ.வாக இருந்த தளபதி எம்.எல்.ஏ.,க்கும், இளைஞரணி மாநில துணை செயலாளரான அதலை செந்திலுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


Latest Tamil News
இதில் அமைச்சர் மூர்த்தி தளபதிக்கும், அமைச்சர் தியாகராஜன் அதலை செந்திலுக்கும் மறைமுக ஆதரவு தெரிவித்துள்ளனர்.போட்டி என வந்துவிட்டால் பகுதி செயலாளர், மாவட்ட பிரதிநிதிகள் ஓட்டு வேண்டும் என்பதால் பல லட்சங்கள் புரளும் களமாக மதுரை மாவட்ட செயலாளர் தேர்தல் காட்சி மாறியுள்ளது. ஒரு தரப்பு சார்பில் பகுதி செயலாளருக்கு ரூ.5 லட்சமும், மாவட்ட பிரதிநிதிகளுக்கு தலா ரூ. 1 லட்சமும் பேரம் பேசி பட்டுவாடா நடக்கிறது.

அழகிரியா, பா.ஜ.,வாதி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: இங்குள்ள அமைச்சர் ஒருவர், கட்சியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என நினைத்து மூத்த நிர்வாகிகளை 'டம்மி' ஆக்கி வருகிறார். தனது ஆதரவாளர் மாவட்ட செயலாளராக வர வேண்டும் என காய் நகர்த்துகிறார். 'தேர்தல் நேர்மையாக நடந்து யார் வேண்டுமானாலும் வெற்றி பெற்று பதவிக்கு வரலாம்' என கட்சியினர் முதல்வரிடம் முறையிட்டு வருகின்றனர்.


இதனால் போட்டி என வந்துவிட்டால் ஓட்டுக்களை பெற ஒரு தரப்பில் ஓட்டுக்கு ரூ.1 முதல் ரூ.5 லட்சம் வரை பட்டுவாடா செய்யப்படுகிறது. 'கலெக் ஷன் கரப்ஷனுக்கு எதிராக தி.மு.க., ஆட்சி இருக்கும்' என கூறி வரும் முதல்வர் ஸ்டாலின், தனது கட்சிக்குள்ளேயே 'கரப்ஷன்' நடப்பதை பார்த்து அமைதியாக இருப்பாரா. அவ்வாறு நடந்தால் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை மீண்டும் சந்தித்து முறையிடவோ அல்லது பா.ஜ., பக்கம் செல்லவோ தயாராக உள்ளோம், என்றனர்.வாசகர் கருத்து (15)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  கட்சி சின்னங்களை ஏன் போடுகிறீர்கள்...

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  இதுதானய்யா யஹிராவிட மாடல். உலகம் பூராவும் விரைவில் விரிவாக்கப்படும் என்று கட்சி மேலிடம் வாரி இரைக்கிறது

 • வீரா -

  அதலை செந்தில் டபுள் டீகிரி MBA அல்லது நோபல் பரிசு வாங்கியுள்ளாரா? GRE, TOFEL போன்றவற்றில் அவர் ஸ்கோர் என்ன? ஒரு குடும்ப பாரம்பரியம் கூட இல்லாத நபரை PTR ஆதரிக்கிறார் என்பது தவறு.

 • மதுமிதா -

  பணம் கொடுத்தாலும் திகராசா வால் மாடல் சகாப்தம் முடியும்

 • வீரா -

  அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடிதான் பிரதமர் அதற்கடுத்த 5/10 வருடங்களுக்கு அமித்ஷா யோகி பட்னாவிஸ் போன்றோர் பிரதமராக வர வாய்ப்புகள் உள்ளன. அதாவது திமுக வலிமையாக இருந்தாலும் தமிழகத்திற்கு வெளியே செல்லகாசுதான். ஒபிஎஸ் இபிஸ் ஒன்று சேராத பட்சத்தில் திமுகவிலிருந்து விலகுபவர்கள் பிஜேபியை விரும்பவது இயல்பே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்