Load Image
dinamalar telegram
Advertisement

பாலாறு - தென் பெண்ணையாறு இணைப்பு எப்போது? ரூ.250 கோடியில் திட்டம் தயாரித்தும் வீண்

Tamil News
ADVERTISEMENT

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், பாலாறு - தென்பெண்ணையாறு இணைப்பு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம்தயாரித்தும், ஆறு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை பெய்யும் நாட்களில், தென் பெண்ணை, செய்யாறு, பாலாறு ஆகிய ஆறுகளில், வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். சில சமயங்களில், பாலாற்றில் நீர்வரத்து குறைவாக இருந்தாலும், தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

செய்யாறு



தென் பெண்ணையாற்றால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகின்றன.அதன் உபரி நீரால், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பலனடையும் வகையில், தென் பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்டது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளிடம் ஐந்தாண்டுகளுக்கு முன் நீர்வளத் துறை அதிகாரிகள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தினர். அதன்பின் இத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.


ஒவ்வொரு ஆண்டும், தென் பெண்ணையாற்றில் வெள்ளம் ஏற்பட்டால் வெளியேறும் உபரி நீரை, செய்யாறு வழியாக பாலாற்றில் இணைக்க வேண்டும் என்பதே, விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. கர்நாடகா, சிக்கமகளூரூ நந்தி மலையில் உருவாகும் தென் பெண்ணை ஆறு, ஓசூர் வழியாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களை கடந்து கடலில் கலக்கிறது.தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழலில், செய்யாறையும், தென் பெண்ணை ஆற்றையும் இணைத்திருந்தால், திருவண்ணாமலை வழியாக, செய்யாற்றில் தண்ணீர் வந்திருக்கும்.


செய்யாற்றில் தண்ணீர் வந்தால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாயும் செய்யாறு வழியாக, திருமுக்கூடலில் இணைந்து பாலாற்றுக்கு தண்ணீர் கிடைக்கும் என்பதே இந்த திட்டத்தின் செயல்பாடு. தென் பெண்ணையாறுக்கும், செய்யாற்றுக்கும் இடையே, 35 கி.மீ., கால்வாய் வெட்டினால், இரு ஆறுகளையும் இணைத்து விடலாம் எனவும் நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
Latest Tamil News

தென் பெண்ணையாற்றின் வெள்ள உபரி நீரை, பாலாற்றின் கிளை ஆறான செய்யாற்றிற்கு எடுத்து செல்லும் வகையில், 250 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்த திட்டம், இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.

நிதி ஒதுக்கீடு



மேலும், மத்திய அரசு நிதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், மாநில அரசின் நிதியில் செயல்படுத்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இத்திட்டம், 2013 - -14ம் ஆண்டு வரவு -- செலவு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள நில ஆர்ஜித சட்டத்தின்படி, மதிப்பீடு திருத்தி அமைக்கும் பணிகள் நடப்பதாக, மூன்றாண்டுகளுக்கு முன்பாக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.அதன்பின் தென் பெண்ணையாறு- - பாலாறு இணைப்பு திட்டம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.


நீர்வளத் துறையினர், முக்கிய திட்டமான இதற்கு, விரிவான திட்டம் தயாரித்து, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, இரு ஆறுகளையும் இணைத்தால், விவசாயிகளுக்கு பெரிதும் பலன் கிடைக்கும்.முதல்வர் கவனம் தேவை


தென் பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஆய்வு நடத்த வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் விவசாயிகள் பலனடைவர். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். திருவண்ணாமலை மாவட்டம் வறட்சியான மாவட்டம். அந்த மாவட்டமும் இதன் மூலம் பயனடையும். இந்த திட்டம் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். முதல்வர் இத்திட்டத்தில் கவனம் செலுத்தி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-கே.நேரு,மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.



வாசகர் கருத்து (3)

  • Sathyanarayanan Sathyasekaren -

    0 .......

  • John Miller - Hamilton,பெர்முடா

    ஒன்றிய அரசு இங்கே சர்தார் வல்லபாய் படேல் சிலை வைக்கத்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இதற்குப்பக்கத்தில் நாலு பெரியார் சிலையும், பேனாவும் வைத்தால் அணை தானே வந்துவிடும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement