'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் செயல்பாடு குறித்தும், அதற்கு எங்கிருந்து நிதியுதவி செய்யப்படுகிறது என்பது குறித்தும் விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
முகாந்திரம்
முதற்கட்ட விசாரணையில், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், இம்மாதம் 22ல், ௧5 மாநிலங்களில், 93 இடங்களில், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்புலர் பிரன்ட் அமைப்பு சார்பில், கேரளாவில் கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.அதேபோல, கோவையில் பா.ஜ., மாவட்டஅலுவலகம், சென்னையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நிர்வாகி வீடு என, தமிழகத்தில் 19க்கும் மேற்பட்ட இடங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இதையடுத்து, மாநிலம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில், ஒரு லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும், '24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்; சந்தேக நபர்களை விசாரிக்க வேண்டும்; மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்' என, ஐ.ஜி.,க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநிலம் முழுதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைகளில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு:நாடு முழுதும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு சொந்த மான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில், என்.ஐ.ஏ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, தமிழகத்தில் 11 பேரை கைது செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்; அவர்களில் 1,410 பேர் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப் பட்டனர்.
பறிமுதல்
வாகனங்கள் மீது கல் வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப் பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில், தஞ்சாவூரில் பஸ் மீது கல் வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜுதீன் ஆகியோரும் அடங்குவர். வன்முறையாளர்களிடம் இருந்து, இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல, மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை, சில அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடந்துள்ளன.இது தொடர்பாக, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. இதுவரை, சந்தேக நபர்கள் 250 பேரிடம் விசாரித்து வருகிறோம்; 100 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவையில், மாநில கமாண்டோ படை, சிறப்பு அதிரடிப் படைகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூடுதலாக, 3,500 போலீசார், பாதுகாப்பு பணியில் உள்ளனர்.அங்கு, மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் முகாமிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் மற்றும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாட்டில்களில் பெட்ரோல் கிடையாது!
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக, தமிழகம் முழுதும் நேற்று பாட்டில்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்ய, 'பங்க்'குகளுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதனால், சில வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். நிலைமை சீராகும் வரை, பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (41)
நடிகர் திலகத்துக்கும் நம்ப ஆணையர் சைலேந்திரபாபுவுக்கும் ஒரே வேற்றுமை. நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தங்கப்பதக்கம் திரைப்படத்தில் நேர்மையான அதிகாரியாக வாழ்ந்தார். சைலேந்திர பாபு திமுக ஆட்சியில் சிவாஜியையும் மிஞ்சுமளவுக்கு (நேர்மையானவர் போலவே) நடிகராகவே வாழ்ந்து வருகிறார். SAILENDRA BABU IS SILENT பாபு, ஜஸ்ட் வாட்சிங் வாட் ஐஸ் ஹப்பெனிங்
ஏய் நான் யார் தெரியுமா. கை காலை உடைச்சிடுவேன். யாருன்னு நினைச்சிக்கிட்டுருக்கே. இதை ரௌடிப்பேசியதாக நினைப்பீர்கள். ஆமாம் ஆனால் அவரையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர் என்று நாம் அழைத்தால் சட்டமன்றம் ரௌடிகளின் கூடாரமா என்று நினைக்கத் தோன்றுகிறது. தருமபுரி செந்திலை வச்சி இந்து சம்பிரதாய பூஜையின்போது செங்கலை காலால் உதைச்சி ரவுடித்தனம் செஞ்சாச்சி - பாராளுமன்ற குப்பை ராஜாவை வைத்து அவங்கம்மாவை பற்றி வெளியில் சொல்லியாச்சி - டீக்கடையில் கொள்ளை அடிச்சாச்சி - பிரியாணி கடையில் கொள்ளை அடிச்சாச்சு - எல்லா இடத்திலும் காசு கொடுக்காமல் ஸ்வாகா பண்ணியாச்சு - ஒன்றிரண்டு தொழிற்சாலைகள் இயங்குவது அவனுங்க கண்ணை உறுத்துமே. எப்படியாவது ரவுடித்தனம் பண்ணி ஒரு நோட்டை வாங்கி செல்லலாம் என்று திட்டம் போட்டிருப்பாரோ அந்த ராஜா. என்னவோ திமுகவில் எல்லா ராஜாக்களும் மிக மிக மிக கேவலமான குணத்தை கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை மஹாராஜா இதேயெல்லாம் ஏவிவிடுகிறாரோ
திமுக ஆட்சியில் மட்டும் இவர் வந்துடுறாரு அப்பத்தான அடிமை வேலை செய்ய முடியும் எதிர்த.து பேசினா PCR சட்டம் போடத்தெரிஞ்ச உங்களுக்கு குண்டு போட்டவனை பிடிக்க தெரியலையா? பிடிக்க வேண்டாம்னு உத்தரவா ?
இந்த வந்துட்டார்ல யுடியூப் டிசிபி.ரெம்ப சவுண்ட் எல்லாம் விடப்படாது. ஏன்னா உங்களால ஒன்னும் செய்ய முடியாது.
ஒரு காவல்துறை ஆணையர் யாராவது எச்சரிக்கை விட்டுவிட்டு பிறகு போய் பயங்கரவாதிகளை பிடிப்பாரா? இவர் நேர்மையானவராக இருந்தால் ரகசியமாக திட்டங்களை போட்டு பொறிவைத்து பயங்கரவாதிகளை பிடிக்கவேண்டும். திமுக ஆட்சிசெய்தால் எல்லாமே நாடகம் தானே.