Load Image
dinamalar telegram
Advertisement

வன்முறை சக்திகளை அடக்குங்கள்; அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

Tamil News
ADVERTISEMENTசென்னை : ''முதல்வர் ஸ்டாலின் காவல் துறைக்கு சுதந்திரம் அளித்து பா.ஜ.வினர் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்'' என தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.தமிழக பா.ஜ. சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சென்னை தாம்பரத்தில் நேற்று நடந்தது.


பின் அண்ணாமலை அளித்த பேட்டி:தேசிய புலனாய்வு அமைப்பும் மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுதும் சோதனை நடத்தி 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' எனும் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 105 பேரை கைது செய்துள்ளன. தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


இரு தினங்களாக பா.ஜ. தொண்டர்கள் அவர்களின் சொத்துக்கள் பா.ஜ. அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. இன்று காலை வரை கோவையில் மட்டும் பா.ஜ. அலுவலகம் உட்பட 12 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.ராமநாதபுரம் திண்டுக்கல் கடலுார் செங்கல்பட்டு திருப்பூரில் தலா ஒரு இடத்திலும்; ஈரோட்டில் இரண்டு என மொத்தம் 19 இடங்களில் பா.ஜ. தொண்டர்கள் ஆர்.எஸ்.எஸ். ஹிந்து முன்னணி அமைப்பினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

Latest Tamil News
தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை ஏற்க முடியாது. இதற்கு பா.ஜ. தொண்டர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டால் என்னவாகும் என்பதை தமிழக அரசு நினைத்து பார்க்க வேண்டும். தேசத்திற்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ. தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும்.

ஆனால் பா.ஜ. அமைதியை விரும்பும் கட்சி. காவல் துறையை நம்பக்கூடிய கட்சி.இதனால் தான் பா.ஜ. நிர்வாகிகள் டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்துள்ளனர்.தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். பிரிவினைவாத சக்திகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.


பெட்ரோல் குண்டு வீசி மூன்று நாட்களாகியும் ஒருவரை கூட கைது செய்ய வில்லை. கோவையில் நாளை மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும். இது அரசுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.முதல்வர் காவல் துறைக்கு சுதந்திரம் அளித்து பா.ஜ.வினர் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (34)

 • sankar - சென்னை,இந்தியா

  அண்ணாமலை, உங்க மீட்டிங்க்கு கூட்டம் கம்மியா வர்றதப் பார்த்தா கொஞ்ச நாள்ல காலி சேர்களைப் பார்த்து தான் பேசணும்.

 • duruvasar - indraprastham,இந்தியா

  தேக்கு சங்கர் பத்து பைசா செலவில்லாமல் எல்லா இருக்கும் போகசொல்கிறார் குமாரு பயந்து போயிட்டாரு என தோன்றுகிறது. தன் சம்பத்து காணாமல் போய்விடும் என நினைக்கிறாரோ ?

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  அண்ணாமலையாரை தமிழக டி.ஜி.பி. ஆக்கிடலாம்.

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  .....

 • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

  நீங்கள் மற்ற மாநிலங்களில் செய்து, மக்களை நம்பவைத்து ஒட்டு வாங்கியதுபோல், தமிழக மக்களையும் ஏமாற்றலாம் என் நினைத்தால் அது உங்கள் முட்டாள்தனம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement