Load Image
dinamalar telegram
Advertisement

ஓட்டு வங்கி அரசியல்: மத்திய அமைச்சர் முருகன் காட்டம்


திருச்சி-''தேச பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரியாமல், தவறான ஓட்டு வங்கி அரசியல் செய்யக்கூடாது,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

Latest Tamil News

திருச்சி விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது:தமிழகம் முழுதும், குறிப்பாக கோவை, மேட்டுப்பாளையம், திண்டுக்கல், திருப்பூர், சென்னை, தாம்பரம், ஈரோடு போன்ற பகுதிகளில், இரு நாட்களாக, பா.ஜ., கட்சி நிர்வாகிகள், ஹிந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை குறி வைத்து, ஒரு கும்பல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.


தமிழக அரசு, இதில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரு நாட்களுக்கு முன், நாடு முழுதும் என்.ஐ.ஏ., சோதனை நடைபெற்றது. தேசத்துக்கு எதிராகவும், நாட்டின் பாதுகாப்புக்கு எதிராகவும், அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஆனால், தி.மு.க., செய்தி தொடர்பாளர் இளங்கோவன், என்.ஐ.ஏ., தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். என்.ஐ.ஏ., சோதனையில் பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.தேச பாதுகாப்பில் விளையாடக்கூடாது. தேச பாதுகாப்பின் முக்கியத்துவம் தெரியாமல், தவறான ஓட்டு வங்கி அரசியல் செய்யக்கூடாது. அதை நிறுத்த வேண்டும்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம், 2026 அக்டோபரில் முடிக்க வேண்டும் என, கால வரையறை செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசியல்வாதிகள், நட்டா சொன்னதை புரிந்து கொள்ள வேண்டும். வெற்று விளம்பரத்துக்காக அந்த இடத்துக்கு சென்று போட்டோ பதிவிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தமிழகத்தின் மானத்தை காப்பாற்ற வேண்டும்.ராஜா போன்ற மூன்றாம்கட்ட பேச்சாளர்கள் வெற்று விளம்பரத்துக்காக, ஹிந்துக்களை கீழ்த்தரமாக அவமதிப்பதை, மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டர்.


Latest Tamil News
ஓட்டுக்காக ஏமாற்றுவதையும், ஹிந்துக்களை புண்படுத்துவதையும் தி.மு.க.,வினர் நிறுத்தி விட்டு, ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்.நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல், காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும். நாட்டுக்கு அச்சுறுத்தலும், மிகப்பெரிய பயங்கரவாத செயலுக்கு திட்டமிடும் தகவல் அடிப்படையில் தான் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆதாரங்கள் அடிப்படையில், உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (18)

 • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

  நாமும் ஒரு ஒட்டு வங்கி உருவாக்கினால் அது ஸீரோ பாலன்ஸ் காட்டுமே

 • Suri - Chennai,இந்தியா

  இவரோட சொந்த ஊரில் இருக்கும் வார்டுகளில் எத்தனை வார்டுகளில் ஜெயிக்கவைத்தார்?

 • sankar - Nellai,இந்தியா

  "ராஜா போன்ற மூன்றாம்கட்ட பேச்சாளர்கள்"- இல்லை அவன் நான்காம்தர பேச்சாளர் - அவன் சொன்னதை திருப்பி சொன்னால் அது அவனது தாயாரை பாதிக்கும்

 • அப்புசாமி -

  இத்தனை வருஷமா இல்லாம ஊர் பேர் தெரியாத இணை, துணை அமைச்சர்களெல்லாம் தமிழ்நாட்டில் வந்து இறங்கி கோடிக்கணக்கான திட்டங்களை அறிவிச்சுட்டுப் போறது அரசியல் இல்லையா? 2017 எய்ம்ஸ் அடிக்கல்நாட்டுவதில் தொடங்கிய ஓட்டு வங்கி அரசியல் உங்களுடையது.

 • sankar - சென்னை,இந்தியா

  ஏதோ லக்கி ப்ரைஸ் அடிச்சி மந்திரியாயிட்டிங்க. ஓட்டு வாங்கி ஜெயிக்கிறது எப்போ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்